ஒரு படத்துக்கான சவுண்ட் டிராக் ஆல்பம் கொடுப்பது அவ்வளவு ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை. இருந்தாலும் அனைத்து பாடல்களுமே ரசிக்கும்படியாக கொடுக்கப்பட்டாலும் ஒரு பாடல் மட்டுமே ஹிட் என்ற விஷயத்தை அடைகிறது. அந்த வகையில் கொஞ்சம் டிஸ்கஷன் பண்ணலாம் வாங்க !!
1. உன்னை கண்டேனே ! - பாரிஜாதம் !
"இந்த பாட்டு ரிலீஸ் ஆகும்போது ரொம்ப பெரிய ஹிட் ! இந்த பாட்டு மட்டும்தான் இந்த படத்தின் சவுண்ட் டிராக் ஆல்பம் வெளிவந்தபோது நல்ல ரீச் கொடுத்த பாடல். பாரிஜாதம் ஒரு நல்ல படம். ரெகுலர் ஆன ரொமான்டிக் படங்களில் இருந்து கொஞ்சம் டிஃபரெண்ட்டாக கொடுக்கப்பட்ட படம் பாரிஜாதம் என்று சொல்லலாம்.
இந்த பாடல் டிவியில் போடும்போது விஷுவல்லாக இந்த பாடல் பார்க்கவே ஒரு மாதிரி வேற லெவல்லில் இருக்கும். காதலில் ஒரு நல்ல உணர்வை இந்த பாடல் கொடுக்கும். குறிப்பாக மழை காலங்களில் இந்த பாட்டு கேபிள் டிவியில் போடும்போது சேனல் மாற்றவே மனது வராது. அவ்வளவு அருமையான பாட்டு.
2.தாஜ்மஹால் ஓவிய காதல் - கள்வனின் காதலி !
இந்த பாட்டு யுவன் இசையில் கேட்கவே ரம்மியமாக இருக்கும். கள்வனின் காதலி படத்தின் சவுண்ட்ட்ராக் ஆல்பம் நிறைய பாடல்களை கொண்டு இருந்தாலும் இந்த ஒரு பாட்டு மட்டும்தான் நல்ல ஹிட். ரேடியோக்களில் இந்த பாடல் நல்ல ரீச் இருந்தது. இந்த பாட்டு அந்த காலகட்டத்தில் வாக்மேன் அல்லது ஐ பேட் போட்டு கேட்கும்போது வேற லெவல்லில் இருக்கும்.
இந்த தென்மேற்கு பருவக்காற்று பாடல் போன்று பேக்ரவுண்ட் மியூசிக்கல் எஃபக்ட்ஸ் எல்லாமே யுவன் பாடல்களில் மட்டுமே சாத்தியம். பெரிய பட்ஜெட் படங்கள் இன்னும் பெரிய ஹிட் கொடுக்க இதுவும் ஒரு காரணமாக இருந்தது.
No comments:
Post a Comment