ஒரு ஸ்கூல் டிராமாவாக ஆரம்பமாகும் இந்த படம் கிளைமாக்ஸ் வரும்போது ஒரு பெர்பெக்ட்டான வேற லெவல் ஹியஸ்ட் பிலிம் ஆக மாறுவதுதான் இந்த படத்துடைய ஸ்பெஷாலிடி. பேட் ஜீனீயஸ் ஒரு பக்காவான திரில்லர். ஒரு பக்கம் அதிகமாக பள்ளிக்கூட கட்டணம் வசூல் பண்ணுவதால் செலவுக்கே சிரமப்படும் அப்பாவை பார்த்து அப்பாவின் கஷ்டங்களை நீக்க வேண்டும் என்று பள்ளிக்கூட மாணவியாக இருக்கும் லின் முடிவு செய்கிறாள். ஆனால் பணம் சம்பாதிக்க வேண்டுமே ? லின் ஆரம்பத்தில் பள்ளிக்கூட எக்ஸாம்களில் தன்னுடைய நட்பு வட்டார நண்பர்களுக்கு சைகை மொழி மூலமாக பதில்களை சொல்லி கொடுப்பதில் திறமையானவள் என்பதால் இதனையே ஒரு பணம் சம்பாதிக்கும் வேலையாக மாற்றுகிறார். கணிசமான தொகையை சம்பாதித்தாலும் இப்படி நட்ட நடு எக்ஸாம்மில் பதில்களை சொல்லி கொடுப்பதால் லின் பின்னாட்களில் பிரச்சனைகளை எப்படி சந்திக்கிறாள் என்று தொடங்கும் இந்த கதை கிளைமாக்ஸ்ஸில் எஸ்.டி.ஐ.ஸி. என்ற உலக அளவில் நடக்கும் ஒரு அகாடமி எக்ஸாம்மை லின் மற்றும் நண்பர்கள் முறியடிப்பதில் முடிகிறது. பொதுவாக தாய்லாந்து படங்கள் வெளிவருவதே அரிதுதான், ஒரு ஸ்கூல் டிராமாவாக இருந்தாலும் ஒரு ஸ்மார்ட்டான கிளாசிக் ஹியஸ்ட் இந்த படம். THAI மொழி படங்கள் வருடத்துக்கு 15 க்கும் குறைவாகத்தான் உலக அளவில் வெளியிடப்படுகிறது, யாரவது காரணம் தெரிந்தால் சொல்லுங்களேன் !
கதையின் கதாநாயகர்கள் திறமையானவர்கள் என்பதும் இங்கே ஏமாற்றி அடைய வேண்டிய பொருள் என்பது எக்ஸாம் கொஸ்டீன் பேப்பரின் பதில்கள் என்பதும் ஒரு வித்தியாசமான கதைக்களம். மிக சிறப்பாக திட்டம் போட்டு கொள்ளையடிக்கும் ஹாலிவுட் லெவல் படங்களோடு கம்பேர் பன்னும்போது சற்றும் குறைவில்லாமல் இந்த டிராமா படம் இருக்கிறது. குறைவான பொடன்ஷியல் மட்டுமே கதையின் முக்கிய கதாப்பத்திரங்களுக்கு இருந்தாலும் ஒரு நல்ல கேரக்டர் டெவலப்மெண்ட் கொடுத்து கதையை சரியாக நகர்த்தியுள்ளார்கள். பாசிட்டிவ் ரோல் இருக்கும் லின் கதாப்பத்திரம் மற்றும் நெகட்டிவ் ரோல் இருக்கும் பாங்க் கதாப்பத்திரம் இந்த இரண்டு கதாப்பத்திரங்களும் மிகச்சிறந்த கேரக்டர் டிசைன் கொடுக்கபட்டுள்ளது. மேலும் எஜுகேஷன் என்ற துறையில் பணம் அதிகமாக வசூல் பண்ணுவதை குறித்து ஒரு இன்லைன் க்ரிட்டிஸிஸம் இந்த படத்தில் இருக்கிறது.
No comments:
Post a Comment