Sunday, September 3, 2023

CINEMATALKS - CHARLIE - 2015 - திரை விமர்சனம் ! - MALAYALAM REVIEW !



ஒரு சில படங்களை பார்க்கும்போதுதான் பேக் எடுத்துக்கொண்டு தேவையான உடைகளை பேக்கேஜ் பண்ணிக்கொண்டு டிக்கெட் போட்டு ஒரு அட்வென்சர் ட்ரிப் செல்ல வேண்டும் என்று நம்ம மனதுக்குள் எண்ணம் உருவாகும். அட்வென்சர் படங்கள் பொறுத்தவரைக்கும் பெரிய பிளஸ் பாயிண்ட் என்னவென்றால் இந்த மாதிரி ஒரு பயணம் சார்ந்த கதைதான். சார்லி படம் இந்த மாதிரி ஒரு நல்ல அனுபவத்தை கொடுப்பதில் சாதித்து இருக்கிறது. ஒரு படத்தில் ஹீரோ அவருடைய மொத்த குடும்பத்தோடு ஒரு பெரிய கிராமத்து வீட்டில் இருப்பார் ஆனால் சாங்க்ஸ்க்கு டான்ஸ் கொடுக்கும்போது மட்டும் வாஷிங்டன்னில் இருந்து ஸ்விட்ச்சர்லாந்து வரைக்கும் சென்று நடன காட்சிகளை கொடுத்து இருப்பார். இது எல்லாமே அட்வென்சர் படம் என்று சொல்ல முடியாது. ஒரு அட்வென்சர் படம் என்பது லொகேஷன்கள் மற்றும் டிராவல்லின் அனுபவத்தை கொடுக்க வேண்டும். உங்களை கதையின் போக்கு ஆச்சரியப்படுத்த வேண்டும். இமாஜின் பண்ணி பாருங்களேன் இந்த வாழ்க்கையை எதுக்காக இனிமேல் வாழனும் , யாருக்குமே நம்மை பிடிக்காதே , எல்லோருமே நாம் சாகவேண்டும் என்று ஆசைப்படுகிறார்களே என்று எல்லோருமே யோசிக்கும்போது எங்கேயோ இருந்து சம்மந்தமே இல்லாத ஒருவர் வந்து ஹெல்ப் பண்ணுகிறார் என்றால் எவ்வளவு நல்ல விஷயம். இந்த காலத்தில் அன்கன்டிஷனலாக எந்த ஒரு எதிர்பார்ப்புமே இல்லாமல் மற்றவர்களுக்கு உதவி பண்ணி வாழ்வது என்பது ரொம்ப ரொம்ப பெரிய விஷயம். இந்த படத்தில் என்னமோ ஒரு மாயாஜாலம் இருக்கிறது. 

பயணங்களை விரும்பும் இளம்பெண் டெஸ்ஸா இப்போது திருமண நிச்சயதார்த்தம் எனக்கு வேண்டவே வேண்டாம் என்று முடிவு எடுக்கிறாள், வீட்டை விட்டு வெளியே தங்கி  ஒரு கிராபிக் ஆர்ட்டிஸ்ட்டாக வாழ்ந்துகொண்டு இருக்கிறாள் டெஸ்ஸா . ஒரு நாள் டெஸ்ஸா அவள் தங்கியிருக்கும் அறையில் வரையப்பட்ட சில காமிக் புத்தக வரைபடங்களை பார்க்கிறாள். இங்கேதான் நம்ம ஹீரோ சார்லியின் இன்ட்ரோ, கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்தவர்களிடம் எல்லாம் சார்லியை பற்றி விசாரித்து இன்னும் தெரிந்துகொண்டு நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று டெஸ்ஸா நிறைய முயற்சிகள் பண்ணினாலும் கடைசி நேரத்தில் எப்படியாவது சார்லியை சந்திக்க முடியாமல் போகிறது. 

சார்லி எதற்காக அனைவருக்கும் உதவி செய்கிறார் ? இவரின் பின்னணி என்ன ? என்று கதைக்களம் ஒரு சர்ப்ரைஸ்ஸாகவே துல்கர் சல்மான் கதாப்பத்திரத்தை சார்ந்து நகர்கிறது. இந்த படத்தில் நிறைய பாசிட்டிவ் விஷயங்கள் இருக்கின்றனர். நமக்கு தெரிந்தவர்களாக இருந்தாலும் தெரியாதவர்களாக  இன்னொருவருக்கு உதவுவது எந்த அளவுக்கு நல்ல விஷயம் என்று ஒரு ஸ்பெஷல் ஆன ஒரு அட்வென்சர் படமாக இந்த படம் இருக்கிறது. இந்த படத்துடைய கிளைமாக்ஸ் போல ஒரு ஃபேண்டஸி லெவல் கிளைமாக்ஸ் பார்த்ததே இல்லை. இந்த படத்தின் தமிழ் மொழி பதிப்பான மாறா படத்தில் இந்த கிளைமாக்ஸ் கொண்டுவந்து இருந்திருக்கலாம் ஆனால் இந்த பதிப்பு வேறு ஒரு வகையில் இருந்தது. சார்லி போல இல்லை. மாறா வேறு. ஆனால் சார்லி வேற லெவல். 

மொத்ததில் கிளைமாக்ஸ் வரைக்கும் படம் பாருங்கள் ! கிளைமாக்ஸ்ஸில் ஒரு செம்ம டுவிஸ்ட் உங்களுக்காக வெயிட்டிங். சார்லி ஒரு பெஸ்ட் ஆஃப் பிலிம் வொர்க்ஸ் . சந்தேகமே இல்லை. 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...