சனி, 23 செப்டம்பர், 2023

CINEMA TALKS - ENDRENDRUM PUNNAGAI - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!




என்றென்றும் புன்னகை - தன்னுடைய சின்ன வயதிலேயே தன்னுடைய  அம்மா குடும்பத்தை விட்டுவிட்டு சென்றதால் பெண்களை பற்றிய நல்ல அபிப்ராயம் இல்லாமல் கடைசி வரையில் திருமணம் செய்யாமல் வாழ வேண்டும் என்று கௌதம் இருக்கிறார். இவருடன் இவருடைய நண்பர்கள் ஸ்ரீஹர்ஷன் மற்றும் பேபியும் தன்னுடைய நண்பனை விட்டுக்கொடுக்காமல் தனித்தே இருக்கின்றனர். ஆனால் காலங்கள் போகப்போக கௌதம் அவருடைய பெர்சனல் உணர்வுகளை மாற்றிக்கொள்ளவே இல்லை. பேச்சலராக தனியாக நண்பர்களுடன் தங்கியிருக்கும் கௌதம் அவருடைய அப்பாவை விட்டும் பிரிந்து இருக்கிறார். இவர் நடத்தும் விளம்பர நிறுவனத்தில் புதிதாக சேரும் பிரியாவிடம் ஆரம்பத்தில் நல்ல அபிப்ராயம் இல்லை என்றாலும் நண்பர்கள் திருமணம் செய்து பிரிந்து போன பின்னால் பிரியாவுடன் காதல் உருவாகிறது. ஈகோ உடைந்து போகுமா ? காதல் கைகூடுமா என்பதுதான் என்றென்றும் புன்னகை படத்தின் கதை. படம் ஆரம்பம் முதல் கடைசி வரைக்கும் ஒரு நல்ல நட்பு வட்டாரங்களின் குறும்புகளுடன் செல்கிறது. கமர்ஷியல் எலிமெண்ட்ஸ் இடம் பெற வேண்டும் என்று ஸ்கிரிப்ட்டை விட்டுக்கொடுக்கவில்லை. இயக்குனர் ஐ.அகமது ஒரு மிக சிறப்பான எக்ஸிக்யுஷன் கொடுத்துள்ளார். சிம்பிள் கதை என்றாலும் ப்ரெசெண்ட் பண்ணிய விதம் மற்றும் ப்ரொடக்ஷன் வேல்யூ மிக அருமை. சந்தானம் மற்றும் வினய் ராய் மிகவும் பெஸ்ட்டான சப்போர்ட்டிங் கதாப்பத்திரங்களாக படத்தில் ஒரு ஒரு முறை வரும்போதும் கண்டிப்பாக உங்களுடைய காலேஜ் ஹாஸ்டல் வாழ்க்கையை ஒவ்வொரு காட்சியிலும் நினைவுபடுத்துவார்கள் என்பதில் ஆச்சரியம் இல்லை. மற்ற ரொமான்டிக் காமெடிகளில் இருந்து இந்த படம் கடைசி வரைக்கும் பிடிவாதமாகவே இருக்கும் ஒரு ஹீரோவின் வாழ்க்கை என்பதால் வெளிவந்த நாட்களில் இந்த படத்தின் ஃபிரண்ட்ஷிப் வேல்யூக்கள் வேற லெவல்லாக இருந்தது. பாடல்கள் அனைத்துமே மீடியம் ஹிட். கடல் நான்தான் அலை ஓய்வது இல்லை பாடல் ஸ்லோ மெலோடி. ஏலே ஏலே தோஸ்த்டா பாடல் ஒரு டு-கே  கிட்ஸ் நட்பதிகாரம். என்னை சாய்த்தாலே பாடல் ஒரு டீசண்ட் மெலோடி. மொத்ததில் நல்ல படம். 

 

கருத்துகள் இல்லை:

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...