Sunday, September 24, 2023

CINEMA TALKS - THEEYA VELAI SEIYANUM KUMARU - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 



பொதுவாக 2013 களில் வெளிவந்த திரைப்படங்களின் மேல் ஒரு நல்ல அபிப்ராயம் எனக்கு உள்ளது. காரணம் என்னவென்றால் இந்த காலத்தில்தான் நல்ல நகைச்சுவையான கலகலப்பான திரைப்படங்கள் வெளிவந்தன, ஒரு கல் ஒரு கண்ணாடி , பாஸ் என்கிற பாஸ்கரன் என்று சந்தானம் காம்பினேஷன்னில் வந்த நிறைய திரைப்படங்கள் படத்துக்கு ஹிட் கொடுத்தது. பொதுவாக சீனியர் நகைச்சுவை ஆக்டர்கள் மத்தியில் சந்தானம் அவருடைய கொஞ்சம் கூட விட்டுக்கொடுக்காத காமெடி டைம்மிங் சந்தானம் அவர்களின் பிளஸ் பாயிண்ட். பொதுவாகவே கலகலப்பான பொழுதுபோக்கு படங்களில் அனுபவமான ரசனையை புரிந்துகொண்ட பிரசன்டேஷன் வேண்டும் எனும்போது இயக்குனர் சுந்தர் சி போல சிறப்பாக யாராலும் கொடுத்துவிட முடியாது. கலகலப்பு , கலகலப்பு 2 , வின்னர் , ஆம்பள போன்ற படங்கள் ஃபெஸ்டிவல் ரிலீஸ் படத்துக்கான எதிர்பார்த்த எண்டர்டெயின்மெண்ட் கொடுப்பதில் குறை வைப்பதே இல்லை. அந்த வகையில் இந்த படமும் நல்ல கமர்ஷியல் எண்டர்டெயின்மெண்ட் நிறைந்த காமெடி படம்தான். 

படத்துடைய கதை , இந்த படத்தில் சதீஷ் காதலை சேர்த்து வைப்பதை ஒரு புரஃபஷன்னாகவே பண்ணிக்கொண்டு இருக்கிறார் , நிறைய வருடங்கள் காதலர்களின் பிரச்சனைகளில் அனுபவமுள்ள சதீஷ் அவருடைய உதவி கேட்ட குமாருக்காக பெரிய லெவல் ட்ரைனிங் கொடுத்து சஞ்சனாவை திருமணம் செய்வது வரைக்கும் கொண்டுவந்து கரை சேர்க்கிறார் ஆனால் இதன் பின்னால்தான் கதையில் மிகப்பெரிய டுவிஸ்ட் இருக்கிறது. படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். மற்றப்படி ஒரு கமர்ஷியல் படத்துக்கான அத்தனை விஷயங்களும் இந்த படத்தில் உள்ளது. 

படத்தில் விஷுவல்லாக பார்க்கும்போது எந்த குறையும் இல்லை. ஒளிப்பதிவு வேற லெவல். மியூசிக் கூட சூப்பர்தான். ஆனால் பாராட்டப்பட வேண்டிய விஷயம் சித்தார்த் மற்றும் ஹன்ஸிகாவின் பெர்ஃபார்மன்ஸ். காதலில் எப்போதுமே ஸ்மார்ட்டான சித்தார்த் இந்த படத்தில் ஃபர்ஸ்ட் ஹால்ஃப் மொத்தமுமே காதலுக்காக போராடும் சராசரி ஐடி காதலராக இயல்பான நடிப்பை கொடுத்துள்ளார் என்றால் ஹன்ஸிகா ஒரு ஒரு சின்ன சின்ன எக்ஸபிரசன்ஸ்ஸிலும் பிரகசிக்கிறார். யாராவது காமிரா எக்ஸ்பிரஷன்ஸ்க்கு ரெஃபரென்ஸ் கேட்டால் இந்த படத்தில் இவரின் சஞ்சனா பாத்திரத்தை கண்டிப்பாக எக்ஸாம்பில் சொல்லலாம். மேலும் காதலுக்கு எப்போதுமே சப்போர்ட் பண்ணும் குடும்பம் ஒரு நல்ல கிரேயடிவ் கான்செப்ட் - படத்துக்கு சிம்பிள்ளாக இருந்தாலும் நன்றாக இருக்கிறது. 

மொத்தத்தில் விஷுவல்லாக நல்ல எக்ஸ்பீரியன்ஸ் இந்த படம் எப்போது பார்த்தாலும் உங்களுக்கு கிடைக்கும்.  

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...