ஞாயிறு, 26 ஏப்ரல், 2026

TAMIL BLOG POST 015 - GENERAL TALKS - 015 - கவனமாக இருக்க வேண்டும் மக்களே !

 


நம்முடைய வாழ்க்கையில் நாம் சரியான விஷயங்களை செய்யும்போது நாம் இருக்கும் இடமே கோவிலாக மாறிவிடும், நாமும் தெய்வம் போன்ற நிம்மதியான மன நிறைவான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருப்போம், 

நிறைய நேரங்களில் இவ்வாறு சரியாக இருப்பதுதான் பிரச்சனை , நமக்கான விஷயங்களை நாம் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கலாம் ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளை நம்மால் கட்டுப்பாட்டில் வைக்க இயலாது. 

இன்னொரு முக்கியமான விஷயமும் நம்முடைய கட்டுப்பாடு என்பதை கடந்து இருக்கிறது அதுதான் மனிதர்களுடைய எண்ணங்கள் , நம்மால் எப்போதுமே இன்னொரு மனிதர் என்ன நினைப்பார் எந்த நேரத்தில் எப்படி நடந்துகொள்வார் என்பதை கட்டுப்பாட்டில் வைக்க இயலாது. 

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் அபாரமான ஆற்றல் இருக்கிறது. ஆனால், அதைத் தன்னுடைய முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தாமல், அடுத்தவர்களின் வாழ்க்கையில் எப்படித் தடையை ஏற்படுத்தலாம் என்று சிந்திப்பவர்கள், உண்மையில் தங்களுடைய சொந்தத் திறமையையே வீணடிக்கிறார்கள். இது ஒருவகையான சுய-அழிவு (SELF DESTRUCTION) ஆகும். 

நம்மிடம் இருக்கும் சக்தியை முழுமையாகப் பயன்படுத்தி, நம்முடைய தரத்தை உயர்த்திக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். நாம் ஒரு படி மேலே செல்லும்போது, மற்றவர்களையும் கைதூக்கி விடுவதுதான் ஒரு மனிதனின் உண்மையான வெற்றி.

எதிர்மறை மனிதர்களைக் கையாளுதல் கடினமானது நம்மை முன்னேற விடாமல் தடுப்பவர்களை அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து விலகி நம் இலக்கை நோக்கிப் பயணிப்பதே புத்திசாலித்தனம். மற்றபடி பொன்னான நேரத்தை சம்பாத்தியம் இல்லாத விஷயங்களுக்காக வீணாக்குவது தேவையில்லாத வேலை. 

நமது வாழ்க்கையை மன நிறைவாக மாற்றுவதையும் நாம் இருக்கும் இடத்தை கோவிலை போல மாற்றிவதையும் நமது கவனத்தில் கொள்ள வேண்டும் மக்களே, உண்மையான வெற்றி வாய்ப்பு சரியான நடவடிக்கைகளில் மட்டுமே இருக்கிறது ! 

EN :

When we do the right things in our lives, the very place we inhabit transforms into a temple, and we live a peaceful and fulfilling life, much like a divine being.

Most of the time, being this "right" is exactly where the problem lies. We can keep our own actions under control, but we cannot control the circumstances and situations around us.

There is another important thing that remains beyond our control: the thoughts of others. We can never control what another person thinks or how they will behave at any given moment.

Every human being possesses extraordinary potential. However, those who do not use it for their own progress, but instead contemplate how to create obstacles in the lives of others, are actually wasting their own talents. This is a form of self-destruction.

We must focus on utilizing our inner strength to the fullest to elevate our own standards. When we move one step higher, lifting others up along with us is the true mark of a person’s success.

Dealing with negative people is difficult. It is wise to identify those who prevent us from progressing, distance ourselves from them, and travel toward our goals. Otherwise, wasting precious time on unproductive matters is an unnecessary task.

People, we must focus our attention on making our lives fulfilling and turning our surroundings into a temple. True opportunities for success lie only in right actions!

1 கருத்து:

சசி சொன்னது…

தராசிற்கு நியாயம்
எல்லாம் தெரியாது.
எந்த பக்கம் கனமாக
இருக்கிறதோ அந்த பக்கம்
சாய்ந்து விடும்
இந்த உலகமும்
அப்படித்தான் போல
பணம் இருந்தால் ஆதரவு
இல்லையெனில் அனாதை!

SPECIAL TALKS - BUTTON PHONE SMS காலத்து கதைகள் !

  ப்ளூடூத்" அனுப்பும்போது அசையாமல் நிற்கும் காலங்கள் உங்களுக்கு தெரியுமா மக்களே ,  இன்று 'ShareIt' அல்லது 'Quick Share'...