புதன், 29 ஏப்ரல், 2026

CINEMA REVIEW - THE BOYS S5 - E1 TO E4 TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 



தி பாய்ஸ் தொடர் பொருத்தவரைக்கும், சூப்பர் ஹீரோக்கள் என்றாலே நல்லவர்கள் என்ற பிம்பத்தை உடைத்து சண்டை என்று வந்தால் ரத்தமும் சதையுமாகச் சிதைத்துக் காட்டும் ஒரு அதிரடிப் படைப்பாகும்; இது ஒரு தனிப்பட்ட பழிவாங்கும் கதையாகத் தொடங்கி, கார்ப்பரேட் நிறுவனங்களின் போலித்தனத்தையும் அரசியலையும் தோலுரித்துக் காட்டும் ஒரு சமூக நையாண்டியாகப் பரிணமிக்கிறது. பில்லி புட்சர் தலைமையிலான சாதாரண மனிதர்கள் அடங்கிய குழுவிற்கும், வோட் (Vought) நிறுவனம் உருவாக்கிய 'தி செவன்' (The Seven) என்ற ஒழுக்கமற்ற சூப்பர் ஹீரோக்களுக்கும் இடையிலான தீராத பகையே இக்கதையின் கரு. தன் காதலியின் மரணத்திற்கு நீதி தேடி வரும் ஹியூகி கேம்ப்பெல் மூலமாகத் தொடங்கும் இப்பயணம், காம்பவுண்ட் வி (Compound V) ரகசியங்கள், நாஜிக்களின் பின்னணி மற்றும் சமூக ஊடகங்கள் எப்படி மக்களை மயக்கும் நல்லவர்களை முடக்கும் போலியான செய்திகளை பரப்பும் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது வரை விரிவடைகிறது. கார்ப்பரேட் பொம்மையாக இருக்கும் ஹோம்லேண்டர் (Homelander), மெல்ல மெல்ல ஒரு பாசிச சர்வாதிகாரியாக மாறுவதையும், அவனை அழிக்கத் துடிக்கும் புட்சரின் வன்முறை மட்டுமே நிறைந்த பாதையையும் இப்படம் மிக நுணுக்கமாகச் சித்தரிக்கிறது. ஐந்தாவது இறுதி சீசனை எட்டும்போது, இந்தப் படம் வெறும் சண்டைக் காட்சியாக மட்டும் இல்லாமல், அதிகாரம் ஒருவனை எவ்வளவு தூரம் சீரழிக்கும் என்பதையும், நீதி என்பது வெறும் விளம்பரமாகிப்போன உலகில் ஒரு 'கடவுளை' வீழ்த்த சாதாரண மனிதன் எவ்வளவு பெரிய அரக்கனாக மாற வேண்டியிருக்கிறது என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்கிறது.குறிப்பாக ஹோம்லாண்டர் நேர் எதிராக எதிர்க்கும் அவரால் பாதிக்கபட்ட பில்லி புட்சர் (Billy Butcher) எப்படி பழிவாங்குகிறார் என்பதை நிறுத்தி நிதானமாக இந்த சீசன் கொண்டு சென்றுக்கொண்டு இருக்கிறது, பெர்ஸனலாக இந்த தொடர் எல்லோருக்கும் பிடிக்கவேண்டும் என்று அவசியம் இல்லை, ஆனால் சராசரி ஆக்ஷன் கதை என்று இல்லாமல் ஒரு தாறுமாறான ஆக்ஷன் டிராமா சூப்பர் ஹீரோ படங்களை மொத்தமாக இறக்கி நிஜ வாழ்க்கை நிலையில் என்ன ஆகும் என்பதை சொல்லும் ஒரு கதைக்களம் என்பதால் இந்த கடைசி சீசன் விறுவிறுப்பாக செல்கிறது, தனது கேன்ஸரை சூப்பர் பவர் என மாற்றி வைத்திருக்கும் பில்லி புட்சர் இப்போது உலகின் மிக வலிமையான ஹீரோ என்று இருக்கும் சோல்ஜர் பாய் (Soldier Boy) உதவியோடு சாகாவரம் அடைய நினைக்கும் ஹோம்லாண்டர் திட்டங்களை தடுத்து அவரின் கதையை முடிக்க போராடுகிறார், நேரடியாக கதையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை, எபிசோட்கள் அவசரமாக கிளைமாக்ஸ் நெருங்குகிறது. 

EN :

When it comes to The Boys series, it is an action-packed creation that shatters the stereotype of superheroes always being "the good guys," instead portraying their battles with extreme, visceral gore. What starts as a personal revenge story evolves into a sharp social satire that exposes the hypocrisy and politics of corporate conglomerates. The core of the story lies in the relentless feud between a group of ordinary humans led by Billy Butcher and "The Seven" a group of immoral superheroes created by the Vought corporation.

This journey, which begins with Hughie Campbell seeking justice for his girlfriend's death, expands to reveal the secrets of Compound V, Nazi origins, and how social media is weaponized to manipulate the public and suppress the truth through fake news. The series meticulously depicts the transformation of Homelander once a corporate puppet . into a fascist dictator, while contrasting it with Butcher’s path, which is fueled entirely by violence.

As it reaches its fifth and final season, the series becomes more than just action; it leaves a powerful mark by showing how deeply power can corrupt. It explores how, in a world where justice has become nothing more than an advertisement, an ordinary man must become a monster himself to take down a "God."

In particular, this season is taking its time to show how Billy Butcher, who was personally victimized by Homelander and stands as his polar opposite, carries out his revenge. This series isn't necessarily for everyone, but it stands out because it isn't just an average action story. it is a wild action drama that deconstructs the superhero genre to show what would actually happen in real life. This final season is moving at a thrilling pace. Billy Butcher, who has essentially turned his cancer into a superpower, is now fighting to stop the plans of an immortality-seeking Homelander with the help of Soldier Boy, the world's strongest hero. While there aren't massive shifts in the core plot, the episodes are racing urgently toward the climax.

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - இந்த செயல்பாட்டை கவனமாக புரிந்துகொள்ள வேண்டும் !

  மனித மூளை என்பது எண்ணற்ற மின்-வேதியியல் சமிக்ஞைகளால் (Electrochemical signals) இயங்கும் ஒரு ஆன்டெனா (Antenna) போன்றது. நாம் கூட்டத்தில் இர...