2002-ல் வெளியான 'தென்காசிப் பட்டணம்' (சரத்குமார் மற்றும் நெப்போலியன் நடித்தது) தமிழ்த் திரைப்படத்தின் கதைச் சுருக்கம் :
தென்காசிப் பட்டணம் திரைப்படம், ஒரு சிறிய ஊரில் பலமான மனிதர்களாக வலம் வரும் கண்ணன் மற்றும் தாஸ் என்ற இரு நண்பர்களின் ஆழமான நட்பைப் பற்றியது. இவர்கள் இருவரும் இணைந்து ஒரு பெரிய சந்தையை நிர்வகித்து வருகிறார்கள். தங்களை எதிர்க்கும் ரவுடிகளையும் எதிரிகளையும் அடித்து துவம்சம் செய்யும் இவர்கள், கண்ணனின் தங்கை மீனாட்சி மீது மட்டும் அளவில்லாத பாசம் வைத்திருக்கிறார்கள். மீனாட்சியின் சொல்லே இவர்களுக்கு வேதம். இந்த நிலையில், மீனாட்சிக்கு ஒரு நல்ல வரனைத் தேட நண்பர்கள் இருவரும் முடிவெடுக்கிறார்கள்.
இதற்கிடையில், இந்த முரட்டு நண்பர்கள் இருவருக்கும் காதல் மலர்கிறது. கண்ணன் சங்கீதா என்ற பெண்ணையும், தாஸ் மஞ்சு என்ற பெண்ணையும் காதலிக்கிறார்கள். ஆனால், தங்களின் முரட்டுத்தனமான பிம்பத்தால் காதலில் சோதப்பும் இவர்கள், மாணிக்கம் பிள்ளை / மாப்பிள்ளை (விவேக்) என்பவரை நாடுகிறார்கள். இவர் மீனாட்சியின் காதலன் என்பது இவர்களுக்குத் தெரியாது. கண்ணன் இரு பெண்களால் விரும்பப்படுவதும் தாஸ் தவறாக புரிந்து நடந்துகொள்வது என்று திருப்பங்களுக்கு நடுவே மாணிக்கம் இவர்களுக்கு உதவ முயலும்போது ஏற்படும் குளறுபடிகளும், ஒருவரின் காதலியை மற்றொருவர் காதலிப்பதாக ஏற்படும் தவறான புரிதல்களும் கதையை மிகவும் கலகலப்பான நகைச்சுவைப் பாதையில் கொண்டு செல்கின்றன.
படத்தின் கிளைமாக்ஸில், இந்த குழப்பங்களைப் பயன்படுத்தி எதிரிகள் நண்பர்களைப் பிரிக்கச் சூழ்ச்சி செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் கண்ணனுக்கும் தாஸுக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்படுகிறது. இருப்பினும், காதல்களின் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்போது, நண்பர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே கிளைமாக்ஸ் டுவிஸ்ட் !
நட்பு என்றால் என்ன ? காதல் மற்றும் புரிதல் இல்லாததால் உருவாகும் விரிசல்கள் எவ்வாறு மொத்த சூழ்நிலையை பாதிக்கிறது என்று சீரியஸ் டோன் கொண்டு செல்லும் திரைக்கதையில் சின்ன கலைவாணர் விவேக் காட்சிகள் தனித்து நிற்கிறது, கிளாஸ்ஸிக் படங்களின் ரசிகர்கள் என்றால் ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக