கும்மியடி
பெண்ணே கும்மியடி
கூடி கொலவையும்
போட்டு கும்மியடி
கும்மியடி
பெண்ணே கும்மியடி
கூடி கொலவையும்
போட்டு கும்மியடி
குமரி பொண்ணுக்கு
மாலை வந்தது
கொழைஞ்சு கொழைஞ்சு
கும்மியடி
வயசு பொண்ணுக்கு
வாழ்வு வந்தது
வளைஞ்சு வளைஞ்சு
கும்மியடி
எங்க வீட்டு
தங்க விளக்கு
ஏங்கி நிக்குது
கும்மியடி
என்னை ஊற்றி
திரிய தூண்ட
ஆளு வந்தது கும்மியடி
கும்மியடி பெண்ணே
கும்மியடி
கூடி கொலவையும்
போட்டு கும்மியடி
கும்மியடி பெண்ணே
கும்மியடி
கூடி கொலவையும்
போட்டு கும்மியடி
அடி செக்க
செவந்த அழகா
கொஞ்ச செழிச்சு
கிடக்கும் திமிரா
பத்து வருஷம்
பக்கம் இருந்தும்
பார்க்கவில்லைடி
நானும்
அந்த ராஜ
கதவு திறந்தா
பல ரகசியமும்
தெரிஞ்சா
பத்தியம் கிடந்த
மாப்பிள்ளை பையனும்
பைத்தியம் ஆக வேணும்
அடி தூக்கி
இருக்கும் அழகு
அவன் தூக்கம்
கெடுத்து போகும்
அடி பாக்கி
இருக்கும் அழகு
இருக்கும் அழகு
உசிர் பாதி
வாங்கி போகும்
அடி பஞ்சு
மெத்தையில
ஒரு பந்தயம்
நடக்குமே
அந்த பந்தயம்
முடிவிலே
அட ரெண்டுமே
ஜெய்க்குமே
கும்மியடி
பெண்ணே கும்மியடி
கூடி கொலவையும்
போட்டு கும்மியடி
கும்மியடி பெண்ணே
கும்மியடி
கூடி கொலவையும்
போட்டு கும்மியடி
ஒரு பொண்ணுகுள்ளது
செருக்கு
அடி ஆணுக்குள்ளது
முறுக்கு
விடிய விடிய
நடந்த கதைய
விளக்க போகுது
விளக்கு
இவ உலகம்
மறந்து கிடப்பா
அடி உறவு மட்டுமே
நினைப்பா
உடுத்தி போன
சேலை மறந்து
வேட்டி உடுத்தி நடப்பா
அடி மோகம்
உள்ள புருஷன்
பல முத்தம்
சொல்லி கொடுப்பான்
இன்னும் போக போக பாரு
இவ புத்தி
சொல்லி கொடுப்பா
அடி உங்க வீட்டுக்குள்ள
லட்சம் குயில் பாடட்டும்
அடி சலங்கை கட்டிக்கிட்டு
சந்தோஷம் ஆடட்டும்
கும்மியடி
பெண்ணே கும்மியடி
கூடி கொலவையும்
போட்டு கும்மியடி
கும்மியடி
பெண்ணே கும்மியடி
கூடி கொலவையும்
போட்டு கும்மியடி
குமரி பொண்ணுக்கு
மாலை வந்தது
கொழைஞ்சு கொழைஞ்சு
கும்மியடி
வயசு பொண்ணுக்கு
வாழ்வு வந்தது
வளைஞ்சு வளைஞ்சு
கும்மியடி
எங்க வீட்டு
தங்க விளக்கு
ஏங்கி நிக்குது
கும்மியடி
என்னை ஊற்றி
திரிய தூண்ட
ஆளு வந்தது கும்மியடி

1 கருத்து:
விக்ரமாதித்தன் மீண்டும் அந்த முருங்கை மரத்திற்குச் சென்று, அங்கே தொங்கிக் கொண்டிருந்த வேதாளத்தைத் தப்பவிடாமல் பிடித்துத் தன் தோளில் சுமந்தான். அவன் மௌனமாகச் செல்லும்போது, வேதாளம் மீண்டும் பேசத் தொடங்கியது:
"மன்னா! உன் விடாமுயற்சி வியக்க வைக்கிறது. உனக்குச் சுவாரஸ்யமூட்ட இதோ ஒரு கதையைச் சொல்கிறேன், கேள்."
சோமபிரபாவின் நிபந்தனை :
உஜ்ஜைனி நகரில் அரிசுவாமி என்ற கல்விமான் வாழ்ந்து வந்தார். அவருக்கு சோமபிரபா என்ற பேரழகி மகளாக இருந்தாள்.
திருமண வயதை எட்டியபோது, அவள் ஒரு நிபந்தனை விதித்தாள்: "நான் ஒரு வீரனையோ, விஞ்ஞானியையோ அல்லது ஒரு ஞானியையோ தான் மணப்பேன். இல்லையெனில் உயிர் துறப்பேன்."
விதிவசத்தால், ஒரே நாளில் மூன்று வெவ்வேறு இடங்களிலிருந்து மூன்று இளைஞர்கள் அவளைத் தேடி வந்தனர்:
ஞானி : இவன் கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும், மறைந்திருக்கும் உண்மைகளையும் ஞானத்தில் அறியும் ஆற்றல் பெற்றவன். இவன் சோமபிரபாவின் தாயைச் சந்தித்து அவளது சம்மதத்தைப் பெற்றான்.
கலைவல்லுநர்: இவன் ஒரு பறக்கும் ரதத்தை உருவாக்கும் திறன் படைத்தவன். இவன் சோமபிரபாவின் தந்தையைச் சந்தித்து, தன் ரதத்தில் அவரை விண்ணில் அழைத்துச் சென்று அவர் மனதை வென்று சம்மதம் பெற்றான்.
வீரன்: இவன் போர்க்கலையில் ஈடு இணையற்றவன். இவன் சோமபிரபாவின் சகோதரனைச் சந்தித்து, தன் வீரத்தால் அவனது சம்மதத்தைப் பெற்றான்.
யாரும் ஒருவருக்கொருவர் கலந்து பேசாததால், மூவருக்கும் ஏழாவது நாளில் திருமணம் என்று வாக்கு கொடுக்கப்பட்டது.
குறித்த நாளன்று மூன்று இளைஞர்களும் வந்தனர். ஆனால், அதே சமயம் சோமபிரபா மர்மமான முறையில் காணாமல் போனாள்.
ஞானி தன் ஞானக்கண்ணால் பார்த்து, "தூமசிகா என்ற அரக்கன் அவளை விந்தியக் காட்டில் உள்ள தன் குகையில் சிறை வைத்துள்ளான்" என்றான்.
கலைவல்லுநர் உடனே ஒரு பறக்கும் ரதத்தை உருவாக்கி, அதில் ஞானியையும், வீரனையும் ஏற்றிக்கொண்டு விந்தியக் காட்டை ஒரு நொடியில் அடைந்தான்.
குகையில் அரக்கன் வெளியே வந்தபோது, வீரன் அவனுடன் கடும் போர் புரிந்து, தனது பிறை வடிவ அம்பால் அரக்கனின் தலையைத் துண்டித்துக் கொன்று சோமபிரபாவை மீட்டான்.
யாருக்கு உரிமை? மீண்டும் உஜ்ஜைனி திரும்பிய பிறகு, மூவருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது:
"நான் என் ஞானத்தால் கண்டுபிடித்திருக்காவிட்டால், நீங்கள் அவளை எங்கே தேடியிருப்பீர்கள்? அவள் எனக்கே சொந்தம்!" என்றான் ஞானி.
"நான் ரதத்தைச் செய்து உங்களை அழைத்துச் செல்லாவிட்டால், அவ்வளவு தூரம் எப்படிச் சென்றிருப்பீர்கள்? அவள் எனக்கே சொந்தம்!" என்றான் கலைவல்லுநர்.
"நான் என் உயிரைப் பணையம் வைத்து அரக்கனைக் கொல்லாவிட்டால், அவள் எப்படி மீட்டிருக்கப்படுவாள்? அவள் எனக்கே சொந்தம்!" என்றான் வீரன்.
வேதாளத்தின் கேள்வி:
கதையை முடித்த வேதாளம் விக்ரமாதித்தனிடம் கேட்டது:
"மன்னா! இப்போது சொல், தர்மத்தின்படி சோமபிரபா யாருக்கு மனைவியாக வேண்டும்?
பதில் தெரிந்தும் நீ சொல்லாவிட்டால் உன் தலை நூறு துண்டுகளாகச் சிதறும்!"
மன்னன் சிறிதும் தயங்காமல் பதிலளித்தான்:
"வேதாளமே! சோமபிரபா அந்த வீரனுக்கே சொந்தமானவள்.
ஏனெனில், ஞானியும் கலைவல்லுநரும் ஒரு கருவியைப் போல (Helper tools) உதவியவர்களே.
ஒரு வருங்காலம் சொல்லும் சோதிடரும், ஒரு தேர் செய்யும் தச்சரும் பிறருக்காக வேலை செய்பவர்கள்.
ஆனால், தன் உயிரைப் பணையம் வைத்து, களத்தில் இறங்கி, எதிரியை அழித்து, அப்பெண்ணை மீட்டவன் வீரன் மட்டுமே. தியாகமும், நேரடிச் செயல்பாடும் கொண்ட வீரனே தலைவன் மற்றும் கணவன் ஆவதற்குத் தகுதியானவன்."
சரியான பதிலைக் கேட்டவுடன் வேதாளம் மீண்டும் சிரித்துக்கொண்டு மரத்திற்கே ஓடியது. வீரமே வாகை சூடும் !
கருத்துரையிடுக