
படம் இப்போது முதல் பாகத்தின் விட்ட இடத்தில் இருந்தே தொடர்கிறது , முதல் பாகத்தின் முடிவில் ஜாக் ஸ்பேரோ தப்பிக்க உதவியதற்காக, வில் டர்னர் மற்றும் எலிசபெத் ஸ்வான் இருவரும் அவர்களின் திருமண நாளன்றே கைது செய்யப்படுகிறார்கள். அவர்களைக் கைது செய்த லார்ட் கட்லர் பெக்கெட், ஜாக் ஸ்பேரோவின் விசித்திரமான திசைகாட்டியை (Compass) கொண்டு வந்தால் அவர்களை விடுவிப்பதாகக் கூறுகிறார். இதற்கிடையில், ஜாக் ஸ்பேரோவிற்கு ஒரு புதிய ஆபத்து காத்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தனது பிளாக் பேர்ல் கப்பலை மீட்க, கடலின் மர்மமான கேப்டன் டேவி ஜோன்ஸிடம் ஜாக் ஒரு ஒப்பந்தம் செய்திருப்பார். அதன்படி, இப்போது ஜாக் தனது ஆன்மாவை டேவி ஜோன்ஸிடம் ஒப்படைக்க வேண்டும், இல்லையென்றால் கிராகன் (Kraken) என்ற ராட்சத கடல் உருவம் அவரை அழித்துவிடும். இந்தச் சிக்கலில் இருந்து தப்பிக்க, ஜாக் ஸ்பேரோ "Dead Man's Chest" என்ற பெட்டியைத் தேடுகிறார். அந்தப் பெட்டிக்குள் டேவி ஜோன்ஸின் இதயம் துடித்துக்கொண்டிருக்கும். அந்த இதயத்தைக் கைப்பற்றினால் டேவி ஜோன்ஸையே கட்டுப்படுத்தலாம் என்பது ஜாக்கின் திட்டம். வில் டர்னர் தனது தந்தையான பூட்ஸ்டார்ப் பில் (Bootstrap Bill) டேவி ஜோன்ஸின் கப்பலில் அடிமையாக இருப்பதை அறிந்து, அவரை மீட்கப் போராடுகிறார். ஜாக், வில், மற்றும் பழைய கமான்டோர் நோரிங்டன் என மூவரும் வெவ்வேறு காரணங்களுக்காக அந்த இதயத்தைக் கைப்பற்ற நினைக்கிறார்கள். மேலும் கடற்பரப்பின் சமீபத்திய அச்சுறுத்தல் என்று சொல்லப்படும் கிரேக்கன் மர்ம விலங்கின் ஆபத்தில் இருந்தும் ஜாக் தனது சாபத்தில் இருந்து நிரந்தர விடுதலை அடைய நினைக்கிறார், ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுக்கொள்ளும் இந்த கதை கடைசியில் அனைவரையும் எங்கு சென்று நிறுத்துகிறது என்பதே கிளைமாக்ஸ்ஸின் முக்கியத்துவமாக கருதப்படுகிறது.
Dead Man’s Chest முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாகவும், பயங்கரமான கதைக் களத்துடனும் (Dark tone) உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தைப் போலவே இதுவும் ஒரு பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. இந்தப் படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் டேவி ஜோன்ஸ் கதாபாத்திரம். அவரது தோற்றம், அந்த முகத்திலுள்ள ஆக்டோபஸ் கால்கள் அசையும் விதம் என அனைத்தும் 2006-லேயே மிகச்சிறந்த கிராபிக்ஸ் (CGI) தொழில்நுட்பத்தில் செய்யப்பட்டிருந்தது. இன்றும் அந்த கிராபிக்ஸ் தத்ரூபமாக இருப்பது ஆச்சரியம். ஜானி டெப் வழக்கம் போல தனது ஜாக் ஸ்பேரோவின் குரும்புத்தனமான அலட்டிக்கொள்ளாத மேனரிசங்களால் சிரிக்க வைக்கிறார், ஆனால் இந்த முறை அவர் உயிருக்கு பயந்து ஓடும் ஒருவராகக் காட்டப்படுவது புதுமை. படத்தின் சண்டைக் காட்சிகள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். குறிப்பாக, ஒரு பெரிய உருளும் சக்கரத்தில் (Water wheel) நின்றுகொண்டு ஜாக், வில் மற்றும் நோரிங்டன் மூவரும் சண்டையிடும் காட்சி சினிமா வரலாற்றிலேயே ஒரு ஐகானிக் காட்சியாகும். ஹான்ஸ் ஜிம்மரின் பின்னணி இசை, குறிப்பாக டேவி ஜோன்ஸ் மற்றும் கிராகனுக்கான தீம் மியூசிக் படத்திற்குப் பெரும் பலம் சேர்க்கிறது. குறையாகச் சொல்லப்போனால், படத்தின் நீளம் (2.5 மணிநேரம்) சற்று அதிகமாகத் தோன்றலாம். மேலும், கதை முடிவடையாமல் அடுத்த பாகத்திற்கு லீட் (Cliffhanger) கொடுத்து முடித்திருப்பது சிலருக்கு ஏமாற்றத்தைத் தரலாம். இருப்பினும், கிராகன் வரும் காட்சிகள் மற்றும் ஜாக் ஸ்பேரோவின் தந்திரங்கள் என இது ஒரு முழுமையான பொழுதுபோக்குத் திரைப்படம்.
PIRATES OF THE CARIBBEAN 2: DEAD MAN'S CHEST
The story picks up right where the first film left off. For aiding Jack Sparrow’s escape, Will Turner and Elizabeth Swann are arrested on their wedding day. Lord Cutler Beckett, the man behind their arrest, offers them freedom only if Will can retrieve Jack Sparrow’s mysterious compass. Meanwhile, a new peril haunts Jack. Years ago, to reclaim the Black Pearl, Jack made a blood pact with the enigmatic Captain Davy Jones. According to the deal, Jack must now surrender his soul to Jones or face destruction by the Kraken, a colossal sea monster.
To escape this fate, Jack hunts for the "Dead Man’s Chest," which contains the beating heart of Davy Jones. Jack’s plan is simple: whoever possesses the heart, controls Davy Jones. Along the way, Will Turner discovers his father, "Bootstrap Bill," is an enslaved crewman on Jones’ ship and vows to rescue him. Jack, Will, and the disgraced Commodore Norrington all pursue the heart for their own conflicting motives. The climax hinges on how these clashing interests collide and where they leave our heroes.
Dead Man’s Chest is grander and significantly darker in tone than the first film. The biggest highlight is undoubtedly the character of Davy Jones. His appearance—especially the fluid movement of his octopus-tentacle beard—remains a masterpiece of CGI technology, even by today’s standards. Johnny Depp, as usual, delights with Jack Sparrow’s quirky mannerisms, though seeing him genuinely terrified for his life adds a fresh layer to the character.
The action sequences are highly inventive. The iconic three-way sword fight between Jack, Will, and Norrington while balanced on a massive rolling water wheel is a standout moment in cinema history. Hans Zimmer’s background score, particularly the haunting themes for Davy Jones and the Kraken, adds immense power to the film. While the nearly 2.5-hour runtime and the cliffhanger ending might be points of debate, the Kraken scenes and Jack’s clever antics make this a complete entertainer.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக