நமது வாழ்க்கையின் பிரச்சனைகளை சரி செய்யும்போது தள்ளிப்போடுவதோ அல்லது முடியாது என்று நினைப்பதோ தவறானது மக்களே ! ஒருவர் சுமார் மாதம் 5 சதவீதம் வட்டி விகிதத்தில் ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார் என்று வைத்துக்கொள்வோம்.
அதாவது, ஒரு நாளைக்குச் சுமார் ₹16,667 வட்டி மட்டும் சேரும் , அதாவது, ஒரு மணி நேரத்திற்குச் சுமார் ₹694 வட்டி சேரும், இது போன்ற பிரச்சனைகள் கடினமானது, இது காதல் தோல்வியோ அல்லது படிப்பு பிரச்சனையோ போல அல்லாது நிஜ வாழ்க்கையில் பாதிப்புகளை உருவாக்கக்கூடியது.
"எடுத்த முடிவு மிகச் சரியாக, குறையே இல்லாமல் முடிய வேண்டும்" என்று எதிர்பார்ப்பதே பல நேரங்களில் செயலைத் தொடங்கத் தடையாக இருக்கும். ஒரு செயலைத் தொடங்கி, அதைச் செய்யச் செய்யச் சரி செய்து கொள்ளலாம் என்ற மனநிலை அவசியம்.
சரியான முடிவுகளை எடுக்க முடிந்தவர்கள் அந்த முடிவுகளை நடைமுறை பயன்பாட்டில் செயமுடியவில்லை என்றால் மிகவும் சிரமப்படுவார்கள், வாழ்க்கை அவர்களுக்கு அர்த்தம் இல்லாததாக மாறிவிடும், தள்ளிப்போடுவது அதைவிட மோசம், மிஞ்சிய நேரம் எதற்கும் போதாது,
பிரச்சனைகளை சமாளித்து முடித்து வைப்பதில் வாழ்க்கையின் சந்தோஷம் இருக்கிறது, பிரச்சனைகள் ஒரு பெரிய பாத்திரத்தின் துளைகளை போன்றது, சேர்த்து வைத்த பொன்னான நேரத்தை தரையில் கொண்டுசென்று வீணக்கிவிடும். இந்த பிரச்சனைகளை கண்டு தள்ளி நிற்க கூடாது, ஆரம்பத்தில் அடிவாங்கினாலும் சண்டை போட்டால்தான் நமது பலத்தையும் நிறைகளையும் போர் நுணுக்கங்களையும் கற்றுக்கொள்வோம்.
கடைசியாக ஒரு விஷயம் என்றால் நீங்கள் வாழ்க்கையில் ஒரு ஒரு பிரச்சனையை சந்திக்கும்போதும் அதனை விட 10 மடங்கு பலமான பிரச்சனையை எப்படி ஜெயித்துக்காட்ட வேண்டும் என்று கற்றுக்கொள்ளுங்கள், உங்கள் பிரச்சனை மிக எளிதில் சரிசெய்யப்படுவது என்பது உங்களுக்கு புரியும், உங்களது பயம் அர்த்தமற்ற விஷயமாக அப்போது இருக்கும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக