கில்லி படத்துடைய மிகப்பெரிய வெற்றி சராசரியான வாழ்க்கையின் வாழ்வியலை சொல்லும் படங்களுக்கு தமிழ் சினிமா இன்னும் பல வருடத்துக்கு காத்திருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கியது. நம்ம சினிமாவின் ஸ்டாண்டர்ட்டை மாற்றிய ஒரு படம் என்றால் இயக்குனர் நெல்சன் அவர்களுடைய டாக்டர் படத்தை எடுத்துக்கொள்ளலாம். நிறைய கதைக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் படத்தை கமெர்சியல் படத்தின் ஸ்டைல்க்கு எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். மக்கள் நிறைய திருப்பங்களை எதிரபார்க்கிறார்கள். உதாரணத்துக்கு பசங்க 2 படத்துக்கும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்துக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அதே போல மக்கள் ஹீரோ வெகுவான நல்லவனாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவதும் இல்லை. மங்கத்தா படம் போல ஹீரோதான் பக்காவான வில்லனாக வெளிப்பட்டாலும் மக்கள் ஆதரவு கொடுக்கிறார்கள். மக்கள் கண்களுக்கு முன்னால் பார்க்கும் விஷயங்கள் உயர்தரமான விஷயமாக இருக்கவேண்டும் என்று கருதுகிறார்கள். படம் பார்க்க கொடுக்கும் பணத்துக்கும் பயணத்துக்கும் நேரத்துக்கும் வேல்யூ இதுதான் என்று நினைக்கிறார்கள். இதனாலோ என்னவோ கமெர்சியல் படங்கள்தான் கலெக்ஷன் என்று வரும்போது வெளுத்து கட்டுகிறது.
1 கருத்து:
good.
கருத்துரையிடுக