நீங்கள் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் இந்த படம் என்று சொல்லலாம், செம்ம எண்டர்டெயின்மெண்ட், இந்த படத்துடைய கதையை பார்க்கலாம். ஸ்டிட்ச் - என்ற ஏலியன் விலங்கு மனிதர்கள் அளவுக்கு புத்திசாலித்தனமானது. இருந்தாலும் ஒரு கட்டத்தில் அடைக்கப்பட்ட விண்வெளி அமைப்பு கப்பலில் இருந்து தப்பி சென்று பூமியில் உலாவிக்கொண்டு இருக்கும்போது சமீபத்தில் பெற்றோரை இழந்த ஒரு அக்கா - தங்கை இருக்கும் வீட்டில் செல்லபிராணியாக சேர்ந்து அங்கே சேட்டைகளை செய்துகொண்டு இருக்கிறது ,
இப்போது இந்த விலங்கை துரத்தி செல்லும் ஏலியன் அமைப்பின் ஆட்களிடம் இருந்து எப்படி தப்பிக்கிறது என்பதுதான். படம் விசுவல் என்ற வகையில் பிரமாதமாக இருக்கிறது. குறிப்பாக ஸ்டிட்ச் போன்ற ஒரு கதாப்பத்திரத்தை லைவ் -ஆக்ஷன் உலகத்தில் இணைக்க வெகு சிறப்பாக அனிமேஷன் ஸ்டைல் பண்ணி இருக்கிறார்கள்.
இந்த படம் வெகு நாட்களுக்கு பின்னால் ஃபேமிலியாக பார்க்க வேண்டிய அளவுக்கு ஒரு செம்ம எமோஷனல் கதைக்களமாக உள்ளது. தமிழ் டப்பிங் வெர்ஷன் வேற லெவல், ஒரு ஒரு வரியையும் டிரெண்ட்டுக்கு ஏற்றது போல காலத்தின் சமகால ரேபரன்ஸ்களை பொருத்தி பிரமாதப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு ஃபேமிலியாக இருக்கும் குடும்பத்தில் எந்த அளவுக்கு விட்டுக்கொடுத்து போகவேண்டும் என்ற பாசிட்டிவ் வேல்யூக்களை இந்த படம் சொல்வதால் மக்கள் தவறாமல் இந்த படத்தை கண்டுகளிக்கவும் என்று வலைப்பூ சார்பாக கேட்டுக்கோள்கிறோம் !!
1 கருத்து:
Favzz!
கருத்துரையிடுக