ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

CINEMATALKS - JAILER TAMIL REVIEW - 2023 TAMIL FILM - திரை விமர்சனம்

ஜெயில்லர் - ஒரு பக்காவான ஆக்ஷன் என்டர்டைன்மெண்ட். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிச்ச இந்த படம் இதற்கு முன்னாடி வெளிவந்த அண்ணாத்த படத்தை பற்றி யோசித்து பார்க்கும்போது மிகப்பெரிய இம்ப்ரூவ்மெண்ட். இயக்குனர் நெல்சன்க்கு இளைய தளபதியின் பீஸ்ட் படத்தை கம்பேர் பண்ணி பார்க்கும்போது இன்னும் பெரிய இம்ப்ரூவ்மெண்ட். இந்த 2023 ஆம் வருடத்தில் பாக்ஸ் ஆஃபிஸ் நம்பர் ஒன் படமாக ஜெயில்லர் இருப்பதால் இந்த படத்துக்கான விமர்சனத்தை இப்போது பார்க்கலாம். 

டைகர் முத்துவேல் ஒரு கோபமான ரிடயர்ட் காவல்துறை அதிகாரி , அவருடைய பையன் ACP  அர்ஜூன் காணாமல் போகிறார், ஒரு கட்டத்தில் அர்ஜூன் வில்லன்களால் கொல்லப்பட்டுவிட்டார் என்று தெரிந்துகொள்ளும்போது கோபத்தின் அதிகபட்சத்துக்கே போகிறார் முத்துவேல். தன்னுடைய குடும்பத்தை பாதுகாக்க மொத்த பலத்துடன் களத்தில் இறங்குகிறார். இனிமேல் அடுத்து என்ன நடக்கும் என்று ஒரு மிகப்பெரிய டெத் கேம் கடைசியில்  ஒரு டுவிஸ்ட்டுடன் முடிகிறது. 

விநாயகன் மெயின் வில்லனாக மிரட்டுகிறார். மலையாளத்தில் துல்கர் சல்மான் -  சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்த கலி படத்துக்கு பின்னால் இந்த படம் இவருக்கு ஒரு ஃபேன்டாஸ்டிக் நெகட்டிவ் ரோல். வசந்த் ரவி பெஸ்ட். முத்துவேல் குடும்பத்தில் மிர்னா மேனன் , மாஸ்டர் ரித்விக் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஒரு பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ் கொடுத்துள்ளனர். 

சிவாஜி மற்றும் எந்திரன் போல ஒரு கிராண்ட் அண்ட் மாஸ் ஆன படம் என்று இல்லாமல் இந்த படம் நெல்சன் ஸ்டைல்லில் வெளிவந்த டாக்டர் , பீஸ்ட்  போன்று ஸ்ட்ரைட் ஃபார்வார்டு ரியல்லிஸ்ட் கமர்ஷியல் பிலிம் படமாக இருக்கிறது. இந்த ஸ்ட்ரைட் ஃபார்வார்டு ரியல்லிஸ்ட் கமர்ஷியல் என்பது நெல்சன் படங்களின் பெரிய பிளஸ் பாயிண்ட். உதாரணத்துக்கு இராணுவத்தின் மெடிக்கல் குழுவின் டாக்டர் வருண் ஒரு பெரிய கடத்தல் நெட்வொர்க்கையே வெறும் இண்டெலிஜன்ஸ் அண்ட் ப்ளானிங்க் கொண்டு எதிர்ப்பது வேறு லெவல். இங்கேயும் அந்த மேஜிக்தான் ஆனால் கதாநாயகன் முத்துவேல் மிக மிக ஸ்ட்ராங்க் ஆன சப்போர்ட்டை உடையவர். மொத்த வில்லங்களின் நெட்வொர்க்கையும் பாதி படத்துக்குள் உடைத்துவிடுகிறார். 

சுனில் , ஜாக்கி , மோகன் லால் மற்றும் சிவா ராஜ்குமார் சிறப்பு தோற்றங்கள் கண்டிப்பாக நன்றாக பயன்படுத்தப்பட்டு உள்ளது கண்டிப்பாக இந்த படம் நெக்ஸ்ட் பாகத்துக்கு முடிவு எடுக்கப்பட்டு உருவாக்கபட்டதுதான் ஆனால் பாதி படம் எடுத்த பின்னால் கதையில் சேஞ்ச் பண்ணியிருப்பது போல இருக்கிறது. கிளைமாக்ஸ்ஸில் வசந்த் ரவியின் முடிவை மாற்றியிருக்கலாம். ஒரு பெரிய நெட்வொர்க்கில் வசந்த் ரவியும் ஒரு மெம்பர் என்று அடுத்த பாகத்துக்கு ஒரு லீட் கொடுத்து கதையை வேறு வகையில் நகர்த்தினால் "தி கோல்ட் மெடல்" என்ற பழைய ஹாலிவுட் பட சாயலை தவிர்த்து இருந்திருக்கலாம். 2 H 40 MIN என்ற பெரிய ரன்னிங் லெந்த் கொடுத்து இருப்பதால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் VIKRAM படம் போல ஒரு யுனிவெர்ஸ் கொடுத்து இருந்தால் மகிழ்ச்சி ! இருந்தாலும் ஓகே. லைட்டான காமெடி டோனில் ஒரு மாஸ் லெவல் நெல்சன் ஸ்டைல் என்டர்டைன்மெண்ட். 

1 கருத்து:

Sivaguru 💖 சொன்னது…

அபூர்வ ராகங்கள் மட்டுமல்ல.. ஒரே நாளில் 3 படங்களில் நடிக்க ரஜினிகாந்தை ஒப்பந்தம் செய்த பாலசந்தர்.. 1977ல் கொடுத்த பேட்டி..!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார், ரஜினிகாந்த். அவரது அபார வளர்ச்சிக்கும், மாபெரும் வெற்றிக்கும் அவரது தனித்துவமான பாணியும், கடின உழைப்பும் முக்கிய காரணங்கள். ஆனால், அவர் ஒரு சூப்பர் ஸ்டாராக உருவெடுப்பதற்கு முன்னால், தனது ஆரம்ப நாட்களில் சந்தித்த அனுபவங்கள் பலருக்கும் ஆச்சரியமூட்டுபவை. குறிப்பாக, 1977 ஆம் ஆண்டு அவர் அளித்த ஒரு பேட்டியில், தனது ஆரம்பகால அனுபவங்கள் குறித்தும், ஒரே நாளில் மூன்று படங்களுக்கு ஒப்பந்தமான அதிசயம் குறித்தும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

ரஜினிகாந்த் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் கன்னட பிரிவில் பயின்று கொண்டிருந்தார். அப்போது, புகழ்பெற்ற இயக்குநர் கே. பாலசந்தர், தமிழ் நடிப்பு பிரிவுக்கு ஆசிரியராக வந்திருக்கிறார். பாலசந்தர் இரு பிரிவுகளின் வகுப்புகளையும் இணைத்து நடத்தி, நடிப்பு பாடங்களைச் சொல்லிக் கொடுத்துள்ளார்.

ரஜினிகாந்த் பாலசந்தரின் தீவிர ரசிகராக இருந்திருக்கிறார். “நான் பாலசந்தரின் ரசிகன். அவர் படங்களில் ஒன்றையும் பார்க்க தவறியதில்லை. அவர் என்னுடைய மானசீக குரு,” என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

பாலசந்தரை முதன்முதலில் சந்தித்தபோது, ரஜினிகாந்தின் மனதில் ஒரு கேள்வி நீண்ட நாட்களாக இருந்திருக்கிறது. அதை அவர் நேரடியாக பாலசந்தரிடம் கேட்டுள்ளார். “நடிப்பைத் தவிர, நடிகர்களிடம் நீங்கள் வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” என்பதுதான் ரஜினிகாந்த் கேட்ட முதல் கேள்வி.

இதற்கு பாலசந்தர், “நடிகர்கள் திரைப்படத்துக்கு வெளியே நடிக்க கூடாது!” என்று பளிச்சென்று பதில் அளித்திருக்கிறார். இதுதான் ரஜினிகாந்த் மற்றும் கே. பாலசந்தர் இடையேயான முதல் அறிமுகமாக அமைந்தது. ரஜினிகாந்த் இன்று வரை பாலசந்தர் சொன்னதை கடைபிடித்து வருகிறார். அவர் திரைக்கு வெளியே ஒருநாளும் நடித்ததில்லை. இந்த வழக்கத்தை அவர் தனது வாழ்வில் பின்பற்றியதன் மூலம் எளிமையானவர் என்று அனைவரும் சொல்லும் வகையில் நடந்து கொண்டார்.

இந்த முதல் உரையாடலுக்குப் பிறகு, பாலசந்தர் ரஜினிகாந்திடம், “தமிழ் பேச வருமா?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு ரஜினிகாந்த், “கொஞ்சம் கொஞ்சம் தெரியும்” என்று பதில் அளித்துள்ளார். அதை கேட்ட பாலசந்தர், “நீங்கள் என்னை கலாகேந்திரா ஆபீஸில் வந்து பாருங்கள்” என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

கலாகேந்திராவில் பாலசந்தரை சந்திக்கப் போனேன். ஏதாவது ஒரு காட்சியை நடித்துக் காட்ட சொன்னார் பாலசந்தர். அப்போது, எனக்கு தமிழ் சரளமாக பேச வராது. ஒரு கன்னட நாடகத்திலிருந்து ஒரு காட்சியை எடுத்து கொண்டு நடித்தேன். அவர் என்னுடைய நடிப்பை பார்த்து ’நீ முதலில் தமிழ் பேச கற்றுக் கொள். உனக்கு தமிழ் சினிமாவில் ஒரு சிறப்பான இடம் இருக்கிறது என்று கூறினார். ரஜினியை அன்றே அவர் கணித்திருந்தார்.

பாலசந்தரின் அறிவுரையை ஏற்று, தமிழ் கற்றுக்கொண்ட ரஜினிகாந்தின் திறமையையும், தனித்துவமான பாணியையும் பாலசந்தர் உடனடியாக அடையாளம் கண்டுகொண்டார். அதன் விளைவுதான், ஒரே நாளில் மூன்று படங்களுக்கு ரஜினிகாந்தை ஒப்பந்தம் செய்த அரிய நிகழ்வு. ரஜினிகாந்த் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்: “‘அபூர்வ ராகங்கள்’, ‘மூன்று முடிச்சு’ ‘அவர்கள்’என அன்றே மூன்று படங்களில் ஒப்பந்தம் செய்தார்.”

இது ஒரு இளம் கலைஞனுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். பொதுவாக, ஒரு அறிமுக நடிகர் ஒரு படம் ஒப்பந்தமாவதே பெரிய விஷயம். ஆனால், ரஜினிகாந்தின் தனித்துவமான நடிப்புத் திறன், ஸ்டைல் மற்றும் பாலசந்தர் போன்ற ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட இயக்குநரின் நம்பிக்கை ஆகியவை ஒரே நாளில் அவருக்கு மூன்று பட வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தன.

‘அபூர்வ ராகங்கள்’ (1975): ரஜினிகாந்த் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய படம். இதில் சிறிய வேடமாக இருந்தாலும், தனது நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இந்த மூன்று படங்களும், ரஜினிகாந்த் எனும் நடிகனை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியதுடன், அவரது எதிர்கால சூப்பர் ஸ்டார் பயணத்திற்கு அடித்தளமிட்டன. இந்த அனுபவம், ரஜினிகாந்தின் ஆரம்பகால போராட்டங்களையும், பின்னர் அவர் அடைந்த மகத்தான வெற்றியையும் நினைவூட்டுகிறது.

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...