Thursday, October 5, 2023

CINEMA TALKS - POKEMON : DETECTIVE PICKACHU - TAMIL REVIEW - திரை விமர்சனம் 😍

POKEMON - DETECTIVE PICKACHU இந்த திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளிவந்தது.  இந்த திரைப்படத்தின் கதை - இந்த திரைப்படம் போகிமொன் யுனிவர்ஸ் இல் அமைந்துள்ளது. உங்களுக்கு எல்லாம் போகிமொன் யுனிவர்ஸ் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும். போகிமொன் யுனிவர்ஸ்ல் மனிதர்கள் போகிமொன் என்ற மாயாஜால சக்திகளை கொண்ட தனித்தனியான ஜீவராசிகள் வாழும் உலகத்தில் வசிக்கிறார்கள். மனிதர்கள் போகிமொன்க்கு போதுமான அளவிற்கு பயற்சி கொடுத்து போகிமொன்கள் மாயாஜால சக்திகள் பயன்படுத்தி கொள்ளும் சண்டை போட்டிகளில் கலந்துகொள்ளலாம். இப்போது கதைக்களத்தில் வருவோம் - TIM GOODMAN (டிம் குட்மென்) அவருடைய தந்தை ஹாரியின் மறைவுக்கு பின்னால் ரைம் சிட்டி என்ற போகிமொன்களின் மோதல் போட்டிகள் தடை செய்யப்பட்ட ஒரு பாதுகாப்பான நகரத்தில் கொஞ்சம் நாட்கள் தங்க நினைக்கிறார். இப்போது ஹேரி யின் வளர்ப்பு போகிமொன் PIKACHU (பிகாச்சுவை) சந்திக்கிறார். ஆனால் பிகாசு பேசும் அனைத்து வார்த்தைகளும் குட் மெனால் புரிந்துகொள்ள முடிகிறது. வேறு யாருக்கும் அந்த பிகாசு பேசுவது புரிவதில்லை. பிகாச்சு உதவியுடன் அவருடைய தந்தை வேலை செய்த நிறுவனத்தை அடைந்து அங்கே MEWTWO என்ற பேசும் சக்திகளை உடைய அதிசக்திவாய்ந்த போகிமொன் கொடுத்த தகவல்களைக் கொண்டு அவனுடைய தந்தை இன்னமும் எங்கேயோ உயிரோடு இருப்பதை அறிந்துகொள்ளும் TIM அவருடைய குழுவினர் மற்றும் PIKACHU இன் SUPPORT உடன் அவருடைய தந்தையை எப்படி காப்பாற்றினார் ? என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை. 


பொகேமொன் யுனிவர்ஸ் சார்ந்த முதல் லைஃப் ஆக்சன் திரைப்படம் என்றாலும் இந்த படத்தின் கதைக்களம் போகிமொன் என்ற அனிமேஷன் தொடரில் இருப்பது போல அமைந்துள்ளது. இந்த திரைப்படம் சிறந்த வசூலை குவித்தது. இந்த படம் POKEMON தொடரின் ரசிகர்களுக்கு கண்டிப்பாக ஒரு ஸ்பெஷல்லான படமாக இருக்கலாம். ஆனால் மொத்தமாக அனைத்து ஆடியன்ஸ்க்கும் புரிய வாய்ப்பு இல்லை. ASH , BROCK , MISTY மற்றும் TEAM ROCKET -ன் JESSY மற்றும் JAMES இல்லை என்றாலும் படம் ஒரு புதுவகை ஸ்டோரிலைன்னுடன் ப்ரெசெண்ட் பண்ணப்பட்டு உள்ளது. பொதுவாக POKEMON படங்களை LIVE ACTION -ல் கொடுப்பது சாத்தியமே இல்லை. காரணம் என்னவென்றால் POKEMON ஒரு பெரிய யுனிவெர்ஸ் !! இன்றைக்கு வரைக்கும் RYAN REYNOLDS தான் PIKACHU வுக்கு VOICE கொடுத்து இருக்கிறார் என்பது பெரிய சர்ப்ரைஸ். இந்த மாதிரி படங்கள்தான் பொதுவாக VIDEOGAME கதைகள் அதிகமாக வசூல் சாதனை கொடுக்கப்போவது இல்லை என்று ஒரு பொதுவான கருத்தை உடைக்கிறது. போகெமோன்களை  அனிமேஷன் டிசைன்னில் இருந்து லைவ் ஆக்ஷன் உயிரினங்களாக கொண்டு வருவதில் விஷுவல் VFX  டிசைன்னர்ஸ் கண்டிப்பாக மெனக்கெட்டு இருக்கிறார்கள். ஆனால் ஃபேன்ஸ் எதிர்பார்ப்பை ஒரு அளவுக்கு நன்றாகவே இந்த WORLDBUILDING - ல் கொடுத்துள்ளனர். கிளைமாக்ஸ்ஸில் லைவ் ஆக்ஷன் GUEST  APPEARANCE கொடுத்து நமது RYAN REYNOLDS சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இது ஒரு STANDALONE படம்தான் என்றாலும் அடுத்த பாகத்தை கொடுத்தால் நன்றாக இருக்கும். இந்த படம் DRAGON BALL - EVOLUTION போல சோதப்பாமல் படத்தின் SOURCE க்கு ஒரு அளவுக்கு கௌரவத்தை தேடிக்கொடுத்து இருக்கிறது. அதுவரைக்கும் சந்தோஷம் !!

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...