சனி, 22 நவம்பர், 2025

MUSIC TALKS - MEENAMMA ADHI KAALAIYILUM ANDHI MAALAIYILUM UNDHAN GNABAGAMEY - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

 


மீனம்மா
அதிகாலையிலும் 
அந்தி மாலையிலும்
உந்தன் ஞாபகமே

அம்மம்மா 
முதல் பாா்வையிலே 
சொன்ன வாா்த்தை
எல்லாம் ஒரு காவியமே

சின்னச் சின்ன 
ஊடல்களும்
சின்னச் சின்ன 
மோதல்களும்
மின்னல் போல 
வந்து வந்து 
போகும்

மோதல் வந்து 
ஊடல் வந்து 
முட்டிக் கொண்டபோதும்
இங்கு காதல் 
மட்டும் 
காயமின்றி வாழும்

இது மாதங்கள் நாட்கள் செல்ல
நிறம் மாறிடும் பூக்கள் அல்ல

ஒரு சின்னப் பூத்திாியில்
ஒளி சிந்தும் ராத்திாியில்
இந்த மெத்தை மேல் 
இளம் தத்தை போல்
புது வித்தை காட்டிடவா


ஒரு ஜன்னல் அங்கிருக்கு
தென்றல் எட்டி பாா்ப்பதற்கு
அதை மூடாமல் தாழ் போடாமல்
எனைத் தொட்டுத் தீண்டுவதா 


மாமன்காரன்தானே 
மாலை போட்ட நானே
மோகம் தீரவே 
மெதுவாய் மெதுவாய்
தொடலாம்

மீனம்மா 
மழை உன்னை நனைத்தால்
இங்கு எனக்கல்லவா 
குளிா் காய்ச்சல் வரும்

அம்மம்மா 
வெயில் உன்னை அடித்தால்
இங்கு எனக்கல்லவா
உடல் வோ்த்துவிடும்

அன்று காதல் பண்ணியது
உந்தன் கன்னம் கிள்ளியது
அடி இப்போதும் நிறம் மாறாமல்
இந்த நெஞ்சில் நிற்கிறது


அங்கு பட்டுச் சேலைகளும்
நகை நட்டு பாத்திரமும்
உனைக் கேட்டேனே 
சண்டை போட்டேனே
அது கண்ணில் நிற்கிறது


ஜாதிமல்லிப் பூவே
தங்க வெண்ணிலாவே
ஆசை தீரவே 
பேசலாம் முதல் நாள் இரவு

மீனம்மா 
உன்னை நேசிக்கவும் 
அன்பை வாசிக்கவும்
தென்றல் காத்திருக்கு


அம்மம்மா
உன்னை காதலித்து 
புத்தி பேதலித்து
புஷ்பம் பூத்திருக்கு

உன்னைத் தொட்ட 
தென்றல் வந்து 
என்னைத் தொட்டு
என்னென்னமோ  
சங்கதிகள் 
சொல்லிவிட்டு போக

உன் மனமும் 
என் மனமும் 
ஒன்றையொன்று 
ஏற்றுக்கொண்டு
ஒப்பந்தத்தில் 
கையெழுத்து போட
பின்பு மோகன பாட்டெடுத்தோம் 
முழு மூச்சுடன் காதலித்தோம்

மீனம்மா
அதிகாலையிலும் 
அந்தி மாலையிலும்
உந்தன் ஞாபகமே

1 கருத்து:

நிலா சொன்னது…

🫡🫡🫡✨️✨️✨️

THE LIFE BOOK - PAGE 2

நம் வாழ்வில் சிலருக்கு, ஒரு கார் வேகமாகச் செல்லக் கூடாது என்றால், வேகமானி ஊசியை அகற்றினால் போதும், கார் வேகமாகச் செல்லாது என்ற கருத்து உள்ளத...