பிரபஞ்ச சக்திகளை எதிர்த்து நாம் செய்யும் வேலைகள் அனைத்தும் கடைசியில் பூஜ்ஜியமாக முடிகிறது என்ற உணர்வு பலருக்கும் வருகிறது. ஆனால், பிரபஞ்சத்தை கவனமாகப் பார்த்தால் வெற்றி தனித்தனி “பேக்கேஜ்” போல நம்முடைய சமுதாயத்தில் கொட்டிக் கொண்டே இருக்கிறது மக்களே அதை எடுக்க வேண்டியது நாம்தான்.
இப்போது நாம் சாப்பிடும் உணவுகளும் குறைவான விலையில் அதிகமான சத்துக்கள் கொண்டிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், காரணம் வருங்காலத்தில் பணம் சம்பாதிப்பதே கடினமாகி விடலாம். மனிதனுடைய மூளை பொம்மை போல் கட்டுப்படுத்தப்படுவதற்காக நான் உணர்கிறேன். தனியார் நிறுவன ஆதிக்கத்தால் இப்போது பல வேலைகள் நடக்கின்றன;
ஆனால், மனிதனுடைய சுய நினைவுகளை இன்னொருவர் கட்டுப்படுத்துவது எப்போதுமே நல்ல செயலாக அமையாது. இருந்தாலும், தனி மனிதனாக என்னுடைய முயற்சிகள் பலமுறை பூஜ்ஜியமாக மாறுகின்றன. இந்த பூமியில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்ய வேண்டுமெனில், பூமியை முழுமையாக ஒரு பேரரசாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் கூட எழுகிறது.
வைரத்தைப் போல உறுதியான மனவலிமை இருந்தால்தான் மதிப்பு குறையாமல் நிலைத்திருக்க முடியும். ஆனால், சமூகத்தில் சில கேவலமான நிகழ்வுகள் என்னை மிகவும் கடுப்பேற்றுகின்றன
இத்தகைய சமூகத்தின் அறியாமையில் மூழ்கிய கேவலமான சுவைகள் சமூகத்தில் பரவுவதால், மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில் காலங்கள் வீணாகின்றன. முடிந்து போனவற்றின் இழப்பை மறந்து விட முடியாது, ஏனெனில் அந்த இழப்பு மிகவும் அதிகம்.
காசு இருந்தால் மட்டும்தான் மக்களே நிறைய பேருக்கு நாம் பேசுவதை கேட்பதே இனிமையாக இருக்கும்; ஆனால் இப்போது நாம் பேச முயற்சித்தாலே, “மனதுக்கு கசப்பாக இருக்கிறது” என்று சொல்லி விலகுகிறார்கள்.
இதுபோன்ற தற்காலிக உறவுகளை நாம் எப்போதுமே நம்பக் கூடாது. இப்போது நடக்கும் பிரச்சனைகளுக்கு கண்ணுக்குத் தெரிந்த தீர்வு எதுவும் இல்லை; புதிய தேர்வுகளை நாம் தான் கண்டுபிடிக்க வேண்டும்.
மனிதனுடைய பேராசைக்கு ஒரு அளவு இருக்கிறது, அது மரணத்தால் மட்டுமே கட்டுப்படுத்தப்படுகிறது. மரணம் இல்லையென்றால், மனிதனுடைய பேராசைக்கு எந்த அளவும் இருக்காது; தனிப்பட்ட ஆசைகளுக்கும் சந்தோஷங்களுக்காகவும் மனிதன் இன்னொருவரை கஷ்டப்படுத்தத் தயங்கமாட்டான் எனவே வாழ்க்கை முடிவுள்ளதாக இருப்பதே எல்லோருக்கும் பாதுகாப்பு !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக