திங்கள், 24 நவம்பர், 2025

MUSIC TALKS - ENTHAN PAADALGALIL NEE NEELAMBARI - UNNAI PARAMALE MANAM THOONGATHADI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

 



கனவென்னும் ஆலைக்குள் 
அகப்பட்ட கரும்பே
நினைவென்னும் சோலைக்குள் 
பூத்திட்ட அரும்பே

எந்தன் பாடல்களில்
நீ நீலாம்பரி
உன்னை பாராமலே 
மனம் தூங்காதடி

எந்தன் பாடல்களில் 
நீ நீலாம்பரி
உன்னை பாராமலே 
மனம் தூங்காதடி

வலம்புரி சங்கை 
கூட உன் கழுத்து 
மிஞ்சுதடி
வஞ்சி மலரே

நிலவதன் தங்கையென 
உன் ஜொலிப்பு சொல்லுதடி
வைர சிலையே

எந்தன் பாடல்களில் 
நீ நீலாம்பரி
உன்னை பாராமலே 
மனம் தூங்காதடி

வசந்தம் என்னும் 
ஒரு பாவை

நீ அசைந்து வந்த 
ஒரு சோலை

வசந்தம் என்னும் 
ஒரு பாவை

நீ அசைந்து 
வந்த ஒரு சோலை

பொய்கை தாமரையில் 
புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா
போதை ஏற்றிக்கொள்ள 
தாளம் போடுதடி அம்மம்மா

பொய்கை தாமரையில் 
புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா…
போதை ஏற்றிக்கொள்ள தாளம் போடுதடி அம்மம்மா…

பொய்கை வண்டாய் 
உன் கை மாற
மங்கை நாண 
செய்கை செய்தாய்

வைகை போல் 
நாணத்தில் வளைகின்றேனே
வை கை நீ என்று
உன்னை சொல்கின்றேனே…

எந்தன் பாடல்களில்
நீ நீலாம்பரி
உன்னை பாராவிடில் 
நித்தம் உறங்காவிழி

பச்சை அரிசி என்னும் 
பற்கள் கொண்ட
உந்தன் புன்சிரிப்பு

நெஞ்ச பானையில 
நித்தம் வேகிறது
உன் நினைப்பு

பச்சை அரிசி என்னும் 
பற்கள் கொண்ட
உந்தன் புன்சிரிப்பு

நெஞ்ச பானையில 
நித்தம் வேகிறது
உன் நினைப்பு

வார்த்தை தென்றல் 
நீ வீசும் போது
ஆடும் பூவாய் 
ஆனேன் மாது

இதழோரம் சில்லென்று 
நனைகின்றது
சிந்தும் தேன்கூட 
சிந்தொன்று புனைகின்றது

---

1 கருத்து:

Rocket Raja சொன்னது…

T RAJENDAR SUPREMACY

THE LIFE BOOK - PAGE 2

நம் வாழ்வில் சிலருக்கு, ஒரு கார் வேகமாகச் செல்லக் கூடாது என்றால், வேகமானி ஊசியை அகற்றினால் போதும், கார் வேகமாகச் செல்லாது என்ற கருத்து உள்ளத...