நீங்கள் நம்பினாலும் நம்ப மறுத்தாலும் இதுதான் உண்மை. இந்த காலத்தில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கவேண்டும் என்பதை பணம்தான் தீர்மானிக்கிறது.
மற்றபடி உங்களுடைய திறமைகளை உங்களுடைய தகுதிகளை இதுவரை நீங்கள் மற்றவர்களுக்கு செய்த நன்மைகளை பொறுத்து உங்கள் சமூகத்திலும் குடும்பத்திலும் நண்பர்களிடமும் இந்த விஷயம் தீர்மானிக்கப்படுவதில்லை.
உங்களிடம் பணம் அதிகமாக இருந்தால் உங்களால் எல்லாவற்றையும் சாதிக்க முடியும். பணம் என்பது இல்லையென்றால் உங்களால் எதுவுமே சாதிக்க முடியாது. ஒரு சிறிய கல்லை கூட நகர்த்த முடியாது. இதுதான் ரியாலிட்டி
இந்தப் பிரச்சினையால் பெண்களை விட ஆண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது, ஆண்கள் அதிகமாக வேலை செய்கிறார்கள்.
ஆனால், அவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடிய நிறுவனங்கள், பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஆண்களை வெளியேற்றுவதற்கான வழிகளையும், குறைந்த சம்பளத்தில் அவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான வழிகளையும் தேடுகின்றன. இந்த வழியில், ஆண்கள் ஒரு பண்டமாக நடத்தப்படுகிறார்கள்.
சொந்தமும், நட்பும் தொடர்ந்து பணம் என்ற அடிப்படையில் நமது வீட்டு ஆடவருக்கு துரோகம் செய்துவிடுகிறது. உண்மையை சொல்ல போனால் ஆண்கள்தான் அதிகமாக பழக்கத்தின் அடிப்படையில் பணத்தை கொடுத்து ஏமாறுகிறார்கள்.
இதற்கு காரணம் என்னவென்றால் ஆண்கள் இன்னமும் நிஜமான அன்பு இந்த உலகத்தில் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இங்கே எல்லாமே பணம்தான்.
பணம் இருந்தால் உங்களுக்கு தேவையான அன்பை விலை கொடுத்து வாங்கலாம் என்றுதான் இந்த உலகம் இருக்கிறதே தவிர்த்து உண்மையான அன்பு என்று இப்பொழுதெல்லாம் யாருக்குமே கிடையாது.
பெண்கள் தங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே போல் ஆண்கள் எப்போதும் தங்கள் வாழ்க்கையையும் அனுபவத்தையும் மிகவும் மதிக்கிறார்கள் என்பதால் அவர்களுக்கு அவர்களுடைய இந்த நோக்கத்துக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.
எனவே, ஆண்களிடம் அவர்களை சோதனைக்கு உள்ளாக்கும் அளவுக்கு பேசக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள். ஆண்களின் வாழ்க்கையில் 1000 சொல்லப்படாத சிரமங்கள் உள்ளன. இவையெல்லாம் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டியிருந்தால், உலகம் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது.
எனவே இந்த சம்பவம் கவனமாகக் கையாளப்பட்டு, ஆண்களை அதிகம் காயப்படுத்தாமல் இருந்தால், அது மகிழ்ச்சியான விஷயமாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக