ஒரு காட்டில் ஒரு புலி தொழிற்சாலை ஆரம்பித்ததாம். அந்த தொழிற்சாலையில்.கஷ்டப்பட்டு ஒரு எறும்பு வேலை செய்து கொண்டிருந்ததாம் இந்த எறும்புடைய வாழ்க்கை அந்த நேரத்தில் சந்தோஷமாகத்தான் இருந்தது. வேலை செய்து முடித்ததும் சம்பளம் கிடைத்தது. குடும்பத்தை பார்த்துக்கொள்ள முடிந்தது !
அந்த மாதமும் எறும்பு தன்னால் முடிந்தவரையில் வேலை பார்த்துக் கொண்டு சம்பளத்தை வாங்கிக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அந்த புலிக்கு கணிசமான லாபம் கிடைத்தாலும் தனியாகவும் தன்னிச்சையாகவும் அந்த எறும்பு வேலை செய்வதையும் சந்தோஷமாக இருப்பதையும் பார்த்த அந்த புலி பின் நாட்களில் நஷ்டத்தை உருவாக்கி விடுமோ என்று பயந்தது.
அதனால் அந்த புலி தன்னுடைய நிறுவனத்தில் அந்த எறும்பை கண்காணிக்கக்கூடிய ஒரு உற்பத்தி மேலாளரை நியமித்தது. அந்த உற்பத்தி மேலாளர் ஒரு.பட்டாம்பூச்சி இந்த உற்பத்தி மேலாளர் ஆராய்ச்சி செய்து கடைசியில் என்ன அட்வைஸ் கொடுத்தார் என்றால் எறும்பு தன்னிச்சையாக செயல்படுவதை நம்மால் அனுமதிக்க முடியாது மேலும் இவ்வாறு எறும்பு தன்னிச்சையாக செயல்படுவது இலாபத்தை குறைக்கும் என்ற அட்வைஸ்தான் !
. அதனால் அந்த எறும்புக்கென்று இந்த நேரத்தில் இந்த வேலை செய்ய வேண்டும் என்று குழப்பமான கடினமான கால அட்டவணையை நீங்கள் கொடுக்க வேண்டும் என்ற கட்டளையை நிர்வாகத்துக்கு விடுத்தது
உடனடியாக இந்த கால அட்டவணை தயாராகி அமல்படுத்தபட்ட பின்னால் எறும்புக்கு அதனுடைய நிம்மதியே போனது. எப்பொழுதுமே நிறைய வேலைகளை செய்ய வேண்டிய கட்டாயம் எறும்புக்கு இருந்தது. சம்பளம் இருந்தாலும் சந்தோஷம் இல்லை. ஏதோ கொஞ்சம்தான் வருமானம் அதிகமானது. பட்டாம்பூச்சி சம்பளம் வாங்கி போனஸ் வாங்கி கொண்டாடியது. புலிக்கு வருமானத்தில் திருப்தி இல்லை.
புலி இன்னும் நிறைய யோசித்தது. ஒரு நிறுவன தலைவராக தனக்கென்று ஒரு பர்சனல் அசிஸ்டன்ஸ் வேண்டும் என்ற அட்வைஸை பட்டாம்பூச்சியிடமிருந்து பெற்றது புலி தனக்கு பர்சனல் அசிஸ்டன்ட்டாக ஒரு வெட்டுக்கிளியை நிர்மாணித்தது.
மேலும் அந்த பட்டாம்பூச்சி தனக்கென்று ஒரு கம்ப்யூட்டர் பிரிண்டர் ப்ரோஜெக்டர் என்று அனைத்து விஷயங்களையும் வாங்கிக்கொண்டு விட்டது. ஒரு நாள் எறும்பு வேலை சுமையால் கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்துகொண்டது. இப்படியே வாழ்க்கை சலிப்பாகவும் கவலையாகவும் இருப்பதால் அதனால் வேலை செய்ய முடியாமல் உற்பத்தி குறைந்து போனது.
எல்லா விஷயங்களும் சரியாக இருக்கும்போது வருமானம் வரும்போது மட்டும் எவ்வாறு தவறாக முடிந்து குறைவாக வருமானம் மாறிவிடும் என்று என்னவோ தப்பு நினைத்த புலி அடுத்த கட்ட வேலைக்காக பட்டாம்பூச்சியை கேட்டது.
வண்ணத்துபூச்சி ஒரு தொழில்நுட்ப வல்லுநரை நியமிக்க வேண்டும் என்ற ஐடியாவைக் கொடுத்து ஒரு குரங்கு தொழில்நுட்ப வல்லுநராக நியமிக்கப்பட்டது. இந்த தொழில் நுட்ப வல்லுனர் ஆகிய குரங்கு நிறைய ஆராய்ச்சிகள் செய்து எறும்புக்கு இன்னும் அதிகமான வேலைகளையும், கிட்டத்தட்ட எறும்பினால் சமாளிக்க முடியாத அளவுக்கு மன அழுத்தத்தையும், கடினமான சட்ட திட்டங்களையும் தாறுமாறாக அமல்படுத்தியதால் எறும்புக்கு தன்னுடைய வாழ்க்கையை நரகமானது போல இருந்தது.
மேலும், தொழில் நஷ்டம் ஆவதை கவனித்த புலி எப்படியாவது நஷ்டத்தில் இருந்து லாபத்தை மீட்டுவிடலாம் என்று தொழில் நுட்பத்தை வல்லுனராக இருக்கக்கூடிய குரங்கை வேலையை விட்டு தூக்கிவிட்டு ஒரு இந்த துறையில் சிறந்த நிபுணராக இருந்த ஒரு ஆந்தையை நியமித்தது.
ஆனால் ஆந்தை தனக்கு தேவையான விஷயங்களை தெரிந்துகொள்ள அதிகமான நேரம் கேட்டது. அந்த நேரத்தையும் கொடுத்த பின்னால் ஆந்தை கடைசியாக ஒரு விஷயத்தை சொன்னது மூன்று மாத கால ஆராய்ச்சியில் தெரியவந்த விஷயம் என்னவென்றால், நம்முடைய கம்பெனியின் லாபத்தை அதிகரிக்க நம்ம கம்பெனியில் இருக்க கூடிய நிறைய பேரை வேலையை விட்டு தூக்கவேண்டுமென்ற அட்வைஸை கொடுத்தது.
இந்த வேலையை விட்டுத் தூக்கக்கூடிய கட்டத்தில் முதலாவதாக மாட்டிக் கொண்டது அந்த எறும்புதான் - முன்னறிவிப்பு கொடுக்காமல் அவசர அவசரமாக எறும்பை வேலையை விட்டு தூக்கிவிட்டார்கள்.அதன் பிறகு அந்த கம்பெனி இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன ?
இதுபோலத்தான் உலகமெங்கும் தனியார் துறைகளில் வேலை செய்து கொண்டிருக்கிறது. உண்மையாக உழைப்பவர்களை கண்டுகொள்ளாமல் அவர்களுக்கு சந்தோஷமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க முடியாமல் அவர்களுக்கு மேலே அதிகப்படியான சம்பளத்தை கொடுத்து வைத்திருப்பவர்கள் கண்ணை மூடிக்கொண்டு என்ன சொன்னாலும் அதனையும் கண்ணை மூடிக்கொண்டு தற்குறி நடவடிக்கை எடுத்து.கஷ்டப்படுவதை மட்டுமே ஒரு வேலை வெட்டியாக அதிகாரபூர்வமான மக்கள் வைத்துள்ளார்கள் என்பதை இணையதளத்தில் இந்தப் பதிவு செய்தவர் ஒரு மனக்குறையாக தெரிவிக்கிறார்
1 கருத்து:
இதுதான்யா ரியாலிட்டி
கருத்துரையிடுக