முதலில் சோசியல் மீடியாக்களில் தங்களுடைய இமேஜை ஒரு வேறு மாதிரியாக ஒரு அதிகமான மக்களை கோமாளித்தனம் செய்து கவரக்கூடிய ஒரு மாதிரியான இது போன்ற ஆட்கள் கண்டிப்பாக வளர்த்துவிட வேண்டாம். இப்படி வளர்த்துவிட கூடியதால் நிறைய பேருக்கு கிடைக்க வேண்டிய அட்டேன்ஷன் இதுபோன்ற சில கோமாளிகளுக்கு கிடைத்து விடுகிறது. இதனை வெகுவான ஒரு உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் தமிழ் சினிமாவில் நிறைய நல்ல திரைப்படங்கள் இப்பொழுதெல்லாம் வெளிவந்து இருக்கிறது. ஆனால் மக்கள் இந்த திரைப் படங்களை எல்லாம் பார்த்து வரவேற்பு கொடுப்பதை விட்டு விட்டு இவர்களை போன்ற கோமாளிகள் தங்கள் கோமாளித்தனம் செய்வதையும் தங்களுடைய இஷ்டத்துக்கு பேசுவதையும் கோமாளித்தனமான இன்டர்வியூ களையும் கொடுப்பதையும் மக்கள் கவர்ந்து பார்க்கிறார்கள். இந்த மாதிரியான விஷயங்கள் அந்த நாளில் அந்த நேரத்தில் வெளிவரக்கூடிய சினிமாக்களுக்கு மக்களிடம் போதுமான ஒரு அட்டென்ஷன் கிடைக்காமல் போகும் அளவிற்கு எதனை பார்க்க வேண்டும், எதனை பார்க்கக்கூடாது என்ற மாதிரியான ஒரு புரிதலை இல்லாத ஒரு நிலைமையை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் வெளியான மார்கன் திரைப்படத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்த திரைப்படம் மிகவும் தெளிவான கதையோட்டத்தை கொண்டிருந்தது. ஆனால் மக்களிடம் இந்த திரைப்படத்திற்கு பேர் ஆதரவு கிடைக்கவில்லை. காரணம் என்னவென்றால் மக்கள் தங்களுடைய விடுமுறை நாட்களில் ஒரு திரைப்படத்துக்கு செலவு செய்வதைவிட இது போன்ற கோமாளிகள் செய்யக்கூடிய கோமாளித்தனத்தைப் பார்ப்பதில் நேரத்தை செலவு செய்கிறார்கள்.இதுதான் மக்களை தங்களுடைய பரிமாணத்தில் இருந்தே பின்னுக்கு தள்ளக்கூடிய செயலாக இந்த வலைப்பூ கருதுகிறது. இப்பொழுது இந்த வலைப்பூ சார்பாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த மாதிரியான ஆட்களை எப்பொழுதும் வளர்த்து விடாதீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக