வெள்ளி, 1 ஆகஸ்ட், 2025

GENERAL TALKS - வறுத்து எடுப்பவர்களும் வசைபாடுபவர்களும் !


முதலாவதாக, அவதூறுகளைப் பாடுபவர்கள் இணையத்தில் இருக்கக்கூடாது என்ற கருத்து உள்ளது. அவதூறு பேசுவதென்பது வேறு. வறுத்தெடுப்பது என்பது வேறு. இதனை ஆங்கிலத்தில் ரோஸ்டிங் மற்றும் பிரபானிட்டி என்று சொல்வார்கள். உதாரணத்துக்கு சமீபத்தில் நானும் வயதான காலத்தில் நாட்டைக் காப்பாற்றுகிறேன் என்று ஒரு படம் வெளிவந்தது இல்லையா? இந்த மாதிரியான படத்தை கண்டிப்பாக ரோஸ்ட் செய்யலாம். இருந்தாலுமே இந்த படத்தை பற்றிய நடிகரை பற்றியோ அவரது குடும்பத்தைப் பற்றியோ கெட்ட கெட்ட வார்த்தைகளை பேசி அவர்களை அவமானப்படுத்துவதை காரணமாக வைத்து பேமஸ் தேடுவது மற்றும் வியூக்களின் மூலமாக பணத்தை சம்பாதிப்பது என்ற தவறான காரியத்தில் நிறைய பேர் இறங்குகிறார்கள். இப்படித்தான் இந்த மாதிரியான ஒரு காரியத்தை செய்தவர். கடைசியில் லைவ் போட்டு அந்த லைவ் இல் கொஞ்சமாக ஏதோ ஒரு விஷயத்தை நடித்து அதன் மூலமாக பழைய அதே போன்ற காணொளிகளை அழித்து இருந்துவிட்டு இப்பொழுது புதுவிதமாக கெட்ட வார்த்தைகளை பேசி கொஞ்சம் குறைத்து வாசித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் ஒரு இணைய பேச்சாளர் இவரைப் பற்றிய தவறான கெட்ட வார்த்தை பேசிவிட்டார் என்று அவர் மீதாக கம்ப்ளைன்ட் வீடியோ ஒன்றை வெளியிட்டார். ஆனால் அந்த தவறாக பேசிவிட்டார் என்று சொல்லப்பட்ட நபர், அவருடைய பழைய வீடியோக்களை காட்டி இவர் நான் சொன்னதை விட மற்றவர்களை மிகவும் மிகவும் அதிகமாக கெட்ட கெட்ட வார்த்தைகளால் பேசி இருக்கக்கூடிய.காணொளிகளாகவே போட்டு அதன் மூலமாக பணம் சம்பாதித்தவர் என்று வெட்டவெளிச்சமாக காட்டி அவருடைய முகத்திரையை கிழித்து இருக்கிறார். ஒரு நகைச்சுவை திறனை வெளிப்படுத்தி ஒரு ரோஸ்ட் செய்ய வேண்டும் என்றால் கெட்ட வார்த்தைகள் மட்டும் தான் செய்து அவைகளை ரோடு செய்ய வேண்டும் என்று அவசியமில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஒரு கட்டத்தில் உங்களுடைய சேனலும் முன்னேற்றத்துக்கு வந்தாலும் அதன் பின்னால் அந்த சேனலுக்கான மரியாதை காரணமாக தங்களுடைய வார்த்தைகளை நீங்கள் கவனமாக பயன்படுத்த வேண்டும் என்று. இந்த வலைப்பூவின் சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.



 

கருத்துகள் இல்லை:

காலத்தின் பயணத்தில் தமிழ் சினிமா ! #16

  நடிகர் மொட்டை ராஜேந்திரனின் வாழ்க்கைப் பயணத்தில், வில்லன் வேடத்திலிருந்து நகைச்சுவை நட்சத்திரமாக மாறிய விதம் மிகவும் சுவாரஸ்யமானது. ஆரம்பத...