ஒரு மனிதன் எப்போதும் வெற்றி பெற வேண்டும் என்று முடிவு செய்தால், எதிர்காலத்தில் மீண்டும் தோல்வியை நினைத்து பயப்படக்கூடாது. கடினமாக இருந்தாலும் கூட, தான் எடுத்த செயல்களை முடிக்க வேண்டும். அதனால் அவற்றை முடிக்க வேண்டும். தோற்றுப் போவார்கள். தனக்கென்று நண்பர்களை தேடிக்கொண்டு இருப்பார்கள். ஆனால் ஜெயிப்பவர்கள் தங்களுக்கென்று எதிரிகளைதான் தேடிக் கொண்டிருப்பார்கள். எப்பொழுதுமே எதிரிகள் இல்லாமல் விளையாடக்கூடிய விளையாட்டு சுவாரஸ்யமானதாக இருக்கப் போவது கிடையாது. நிஜமான வாழ்க்கையில் எப்பொழுதுமே கடினமான எதிரிகள் இருக்கத்தான் போகிறார்கள்.இந்த மாதிரியான எதிரிகள் உங்களுடைய உங்களை நடுக்கத்துக்கு உள்ளாக்கவும் உங்களை பயப்பட வைக்கும். என்னென்னவோ முயற்சிகள் செய்வார்கள். இந்த விஷயங்களையெல்லாம் நீங்கள் போட்டு போட்டால் மட்டும் தான் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த மாதிரியான ஒரு போட்டியில் நீங்கள் இறங்கும் பொழுது உங்களுடைய சட்டை அழுக்காகலாம். "சண்டையில் கிழியாத சட்டை எங்கே இருக்கிறது ?" என்ற அளவுக்கு உங்களுக்கு அவமானங்கள் உருவாகலாம். உங்களை நம்பியவர்கள் கூட உங்களின் மீதான நம்பிக்கை குறைந்து உங்களை தரக்குறைவாக இது போன்ற இடங்களில்தான் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், உங்கள் சொந்த மனதையும் உங்கள் சொந்த தன்னம்பிக்கையையும் அதிகமாக நம்ப வேண்டும். வாழ்க்கை ஒவ்வொரு முறை சிதையும் போதும், நீங்கள் அந்த வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக்கொண்டு அதை ஒன்றாக இணைக்க வேண்டும். யாரும் உங்களுக்காக இதைச் செய்ய மாட்டார்கள். நீங்கள் உங்கள் சொந்த விஷயங்களைச் செய்ய வேண்டும். உங்கள் உடலை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் மனதைப் புதுப்பித்து மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.இந்த மேம்படுத்தக்கூடிய மனநிலை உங்களுக்கு இமாலய வெற்றியைத் தரத் தயாராக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக