இந்த படத்துடைய கதை - ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பல் நேரடியாக தாக்கப்பட்டு அவர்களுடைய வாகனங்கள் நடு பாலைவனம் போன்ற ஏரியாவில் மாட்டிக்கொண்டு இருக்கும்போது அங்கே வேட்டைக்காக வந்த ஒரு வேட்டைக்காரர்தான் லேவியன் மாஸ் - ஒரு கட்டத்தில் பணம் நிறைந்த ஒரு பெட்டியை சம்பவ இடத்தில் இருந்து எடுத்துக்கொண்டு சென்று விடுகிறார். இவரும் அந்த பணத்தை காப்பாற்றி தனக்கு சொந்தமான விஷயமாக மாற்றிவிடலாம் விடலாம் என்னென்னவோ முயற்சி செய்கிறார். ஆனால் கொடிய கொலைகாரனாக இருக்கக் கூடிய வில்லன் ஆன்டேன் ஸேகரிடமிருந்து அந்த பணத்தை இவரிடம் காப்பாற்ற முடியாது என்று அவருக்கு தெரியவில்லை. நோ கன்ட்ரி ஃபார் ஓல்ட் மேன் என்ற இந்த திரைப்படம் வெகுவாக மக்களை கவர காரணம் நிறைய நிறைய வயலன்ஸ் காட்சிகளாக இந்த படத்தின் காட்சிகள் இருந்திருந்தாலும்.இந்த படத்தை ஒரு தெளிவான கேமரா காட்சி அமைப்பிலும் மிகச் சிறப்பான சவுண்ட் எடிட்டிங் எபேக்ட்ஸ்களும் சராசரி படத்தில் இருந்து உயர்தர வித்தியாசத்தை கொண்டு வந்து இருக்கிறார்கள். இதுதான் இந்த படத்துக்கான அதிகப்படியான பாராட்டை எடுத்துக் கொடுக்கிறது. தொடர்ந்து 24 மணி நேரமும் கோபமாகவே சுத்திக்கொண்டு இருக்க கூடிய ஒரு கேரக்டராக ஆன்டேன் ஸேகரியின் படைப்பு மிக சிறப்பானதாக இந்த படத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேரக்டர் மட்டுமே இந்த படத்தின் கதாநாயகரைப் போல அதிகப்படியான காட்சிகளில் இடம் பெற்று டாமி லீ ஜோன்ஸ் போன்ற சீனியர் நடிகரின் பெர்ஃபார்மேன்ஸ் மிஞ்சும் அளவுக்கு கவனிக்கத்தக்க இந்த நடிகர் கொடுத்துள்ளார். ஒரு திரைப்படமாக பார்க்கும் பொழுது நல்ல எண்டர்டெயின்மெண்ட் வேல்யூவும் சிறப்பான கதை தன்மையும் இந்த படத்தில் இருப்பதை உங்களால் மறுக்க முடியாது. நீங்கள் ஹாலிவுட் படங்களின் மீது ஆர்வம் கொண்டவராக இருந்தால், இந்தப் படத்தை நீங்கள் நிச்சயமாகப் பார்க்க வேண்டும். இந்தப் படம் உங்களுக்கு மார்ட்டின் ஸ்கோர்செஸியின் க்வேன்டின் டாரேன்டினோவின் படங்களைப் போலவே காட்சி பாணியைக் கொண்டுள்ளது என்று சில நேரங்களில் விஷுவல் ஸ்டைல்லில் தோன்ற வைத்துவிடும் இதுதான் இந்தப் படத்தை ரசிகர்களின் விருப்பத்திற்குரியதாக ஆக்குகிறது.
1 கருத்து:
இந்த படத்துடயை கிளைமாக்ஸ் யாருக்காவது புரிஞ்சா சொல்லுங்களேன்
கருத்துரையிடுக