இந்த படம் உண்மையில் வேற லெவலில் இருக்கிறது. NE ZHA 1 படத்தில் இடம்பெற்ற NE ZHA என்ற கேரக்டர் தன்னை சார்ந்து இருக்கக்கூடிய நண்பரான AO BING மற்றும் கிராமத்து மக்களை காப்பாற்றத்தான் முயற்சி செய்கிறார்.
இந்த படத்தில் ஒரு கொடிய டிராகன் அமைப்புகளை நேரடியாக எதிர்க்கும் சூழ்நிலையில் நிறைய பேர் அவரை ஏமாற்ற முயற்சிப்பதால் நேரமும் காலமும் அவருக்கு சரியான இடம் கொடுக்கவில்லை. NE ZHA 2 - ஒரு நேரடியான பிரம்ம யுத்தம் என்றே சொல்லலாம்.
கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய மக்களை காப்பாற்றுவதற்காக எடுக்கக்கூடிய முயற்சிகள் அவருக்கு எதிராக மாறுவதையும் ஒரு மோசமான ஆட்களுடைய சதிவலையான நெட்வொர்க்குகளில் கொஞ்சம் கொஞ்சமாக தெரியாமல் நுழைந்து மாட்டிக் கொள்வதையும் பின்னால் சதிவலைகளில் இருந்து மீள முடியாமல் நிறைய இழப்புக்களை சந்திப்பதையும் காட்டுவதுதான் இந்த படம் !
இந்தப் படம் போர்க்களத்தின் காட்சிகளோடு வெகு சீரியஸாகக் காட்டப்பட்டுள்ளது. மேலும். இது குழந்தைகளுக்கு ஏற்றதாக இருந்து சரியான நேரத்தில் வெளிவந்த சராசரி பொழுதுபோக்குப்படமாக மாற்றப்பட்டிருக்கலாம். ஆனால் இந்தப் படத்திற்கு ஒரு தீவிரமான ஹாலிவுட் அதிரடி காட்சிகளோடு கூடிய கற்பனைப் படத்தைப் போலவே பிரமாண்டமான கதை அமைப்பையும், கடினமான டுவிஸ்ட்டுகள் நிறைந்த கதையையும், மக்களை வெகு பிரம்மாண்டமாக அனிமேஷன் கொடுத்து கதையை நகர்த்த வைத்த கதையமைப்பு அம்சத்தையும் வழங்கியதற்காகவே இந்தப் படத்தின் படக்குழு மிகுந்த பாராட்டுகளைப் பெற வேண்டும்.
1 கருத்து:
சூப்பர் படம் !
கருத்துரையிடுக