Thursday, September 5, 2024

MUSIC TALKS - KARUPPU NILAA NEEDHAN KALANGUVADHEN ? THULI THULIYAA KANNEER VILUVADHU YEN ? - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன் துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன் 
சின்ன மானே மாங்குயிலே உன் மனசுல என்ன குறை ?
பெத்த ஆத்தா போல் இருப்பேன் இந்த பூமியில் வாழும் வரை !
எட்டு திசை யாவும் கட்டி அரசாள வந்த ராசா நீதானே !
கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன் ? துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன் ?

பத்து மாசம் மடியேந்தி பெத்தெடுத்த மகராசி 
பச்சபுள்ள உன்னவிட்டு போனதென்னி அழுதாயா
மாமன் வந்து என்னை காக்க நானும் வந்து உன்னை தாக்க
நாம் விரும்பும் இன்பம் எல்லாம் நாளை வரும் நமக்காக
காலம் உள்ள காலம் வாழும் இந்த பாசம் 
பூ விழி இமை மூடியே சின்ன பூவே கண்ணுறங்கு
கருப்பு நிலா நீதான் கலங்குவதேன் துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன் ?

வண்ண வண்ண முகம் காட்டி வானவில்லின் நிறம் காட்டி 
சின்ன சின்ன மழலை பேசி சித்திரம் போல் மகனே வா
செம்பருத்தி மலர் போலே சொக்க வெள்ளிமணி போலே 
கன்னம் ரெண்டும் மின்ன மின்ன கண்மணியே மடிமேல் வா
பாட்டு தமிழ் பாட்டு பாட அத கேட்டு ஆடிடும் விளையாடிடும் தங்கத்தேரே நீதானே

கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன் துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன் 
சின்ன மானே மாங்குயிலே உன் மனசுல என்ன குறை ?
பெத்த ஆத்தா போல் இருப்பேன் இந்த பூமியில் வாழும் வரை !
எட்டு திசை யாவும் கட்டி அரசாள வந்த ராசா நீதானே !
கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன் ? துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன் ?

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...