Thursday, September 5, 2024

MUSIC TALKS - KAN IRANDIL MODHI NAAN VILUNDHENE KAARANAM INDRIYE NAAN SIRITHENE - SONG LYRICS - VERA LEVEL PAATU !




கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே 
காரணம் இன்றியே நான் சிரித்தேனே
என் மனமும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
என் உயிரின் உயிரே என் இரவின் நிலவே
உன் அருகில் வரவே நீ தருவாய் வரமே


ஊருக்குள்ளே கோடி பொண்ணு யாரையும் நினைக்கலையே
உந்தன் முகம் பார்த்த பின்னே எதுவும் பிடிக்கலியே
உன்னுடைய பார்வையிலே என் உடம்பு வேகுதடி
பக்கத்திலே நீ இருந்தா என் வயசு நோகுதடி

கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே 
காரணம் இன்றியே நான் சிரித்தேனே
என் மனமும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே

ஏதோ ஒண்ணு சொல்ல என் நெஞ்சுகுழி தள்ள
நீ பொத்தி வச்ச ஆசை எல்லாம் கண்ணுமுன்னே தள்ளாட
கண்ணாமூச்சி ஆட்டம் என் கண்ணுக்குள்ளே ஆட
நீ சொல்லும் சொல்லே கேக்காமலே
உந்தன் உள்ளம் திண்டாட

உள்ளுக்குள்ளே படபடக்க நெஞ்சுக்குள்ளே சிறகடிக்க
கால் இரண்டும் இறக்க கட்டி மேலே கீழே பரபரக்க
பட்டுப்பூச்சி பட்டாம் பூச்சி ஆனேனே

உன் முத்து முத்து பேச்சு என் சங்கீதமா ஆச்சு
உன் சுண்டு விரல் தீண்டையில நின்னு போச்சு என் மூச்சு
பஞ்சு மெத்த மேகம் அது செஞ்சு வெச்ச தேகம்
நீ தூரத்தில நின்னா கூட பொங்கிடுது என் முகம்

முட்ட கண்ணு முழி அழகில் குத்தி குத்தி கொன்னவளே
சிக்கி கிட்ட என் மனசை ஊற வெச்சு துவைச்சவளே
ஆத்துக்குள்ள அம்மி கல்லா போறேனே

ஊருக்குள்ளே கோடி பொண்ணு யாரையும் நினைக்கலையே
உந்தன் முகம் பார்த்த பின்னே எதுவும் பிடிக்கலியே
உன்னுடைய பார்வையிலே என் உடம்பு வேகுதடி
பக்கத்திலே நீ இருந்தா என் வயசு நோகுதடி

கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே 
காரணம் இன்றியே நான் சிரித்தேனே
என் மனமும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே




No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....