திங்கள், 30 செப்டம்பர், 2024

MUSIC TALKS - KONJAM NAAL PORU THALAIVAA - ORU VANJI KODI INGE VARUVAA - KAN IRANDIL POR THODUPPAA - ANDHA VENNILAVAI POL IRUPPAA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !


கொஞ்சநாள் பொறு தலைவா 
ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா 
கண்ணிரண்டில் போா் தொடுப்பா 
அந்த வெண்ணிலவை தோற்கடிப்பா

காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நான் அறியேன்
தென்னாடோ எந்நாடோ எந்த ஊரோ நான் அறியேன்
ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன ? கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி !!

நேத்துக்கூட தூக்கத்தில பாா்த்தேன் அந்த பூங்குயில 
தூத்துக்குடி முத்தெடுத்து 
கோா்த்து வைச்ச மாலை போல 
வோ்த்துக்கொட்டி கண்முழிச்சுப் பாா்த்தா 
அவ ஓடிப்போனா உச்சிமலை காத்தா
சொப்பனத்தில் இப்படிதான் எப்பவுமே வந்து நிப்பா !
சொல்லப்போனா பேரழகில் சொக்கத்தங்கம் போல் இருப்பா 
வத்திகுச்சி இல்லாமலே காதல் தீயை பத்த வைப்பா !
தேனாறு பாலாறு போல வந்தா கண்ணுக்குள்ள 
தேசிய கொடி போல குத்தி வச்சேன் நெஞ்சுக்குள்ள
ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன ? கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி !!

பச்சை தாவணி பறக்க அங்கு தன்னையே அவன் மறக்க 
வச்ச கண்ணு வாங்கலையே என் மாமன் கண்ணு தூங்கலையே

என்னோடுதான் கண்ணாமூச்சி 
என்றும் ஆடும் பட்டாம்பூச்சி
கட்டாயம் என் காதல் ஆட்சி 
கைகூடும் பார் தென்றல் சாட்சி 
சிந்தனையில் வந்துவந்து போறா 
அவ சந்தனத்தில் செஞ்சுவெச்ச தேரா 
என்னுடைய காதலிய ரொம்ப ரொம்ப பத்திரமா
எண்ணம் எங்கும் ஒட்டிவைக்க 
வண்ண வண்ணச் சித்திரமா
வேறொருத்தி வந்து தங்க என் மனசு சத்திரமா ?

ஆத்தாடி அம்மாடி என்ன சொல்ல கட்டழகை 
ஆவாரம் பூவாக வாய் வெடிச்ச மொட்டழகை
ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன ? கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி !!


கொஞ்சநாள் பொறு தலைவா 
ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா 
கண்ணிரண்டில் போா் தொடுப்பா 
அந்த வெண்ணிலவை தோற்கடிப்பா

காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நான் அறியேன்
தென்னாடோ எந்நாடோ எந்த ஊரோ நான் அறியேன்
ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன ? கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி !!


கருத்துகள் இல்லை:

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...