Friday, September 6, 2024

MUSIC TALKS - HEY - ASAINDHAADUM KAATRUKKUM AZHAGANA POOVUKKUM KAADHALAA KAADHALAA ? - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா காதலா
அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும் காதலா காதலா
கொஞ்சம் இனிக்கும் கொஞ்சம் கரிக்கும் முத்த சுவைக்குள் மூழ்க வா 
இச்சை இருந்தும் கச்சை அணிந்தேன் சர்ச்சைகள் செய்திட வா

தீப்போன்ற உன் மூச்சோடு ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் என் தோள் சேரு 
உற்சவம் போது உச்சியை கோது
என் வாயோடு உந்தன் வாய் சேர்த்து
உன் மார்போடு மெல்ல கூர் பார்த்து 
கைகளில் ஏந்து பொய்கையில் நீந்து
நான் வேர் வேராய் அட வேர்த்தேனே
ஒரு பால் பார்வை உன்னை பார்த்தேனே
சிற்றின்பம் என்றிதை யார் இங்கு சொன்னது 
பேரின்ப தாமரை தாழ் திறக்க 
ஐந்தடி உடல் நிலை மெய் மறக்க
அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா காதலா
அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும் காதலா காதலா

நீ ஆராய்ச்சி என்னை பண்ணாதே
என் பூந்தேகம் அது தாங்காதே
உன் கண் கொண்டு என்னை கொய்யாதே உன்
தீ மூச்சால் என்னை கொல்லாதே
முத்தங்கள் போட்டு வித்தைகள் காட்டு
நீ கீழ் மேலாய் என்னை கிள்ளாதே 
நீ மேல் கீழாய் என்னை அள்ளாதே

பெண்ணே நீ பெண்ணல்ல அட்சய பாத்திரம் 
பெண்ணென்ற கோப்பைக்குள் நான் விழுந்தேன்
ஆறோடு தேன் கொண்டு வாய் கலந்தேன்

அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா காதலா
அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும் காதலா காதலா
கொஞ்சம் இனிக்கும் கொஞ்சம் கரிக்கும் முத்த சுவைக்குள் மூழ்க வா 
இச்சை இருந்தும் கச்சை அணிந்தேன் சர்ச்சைகள் செய்திட வா
அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா காதலா
அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும் காதலா காதலா

No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....