Friday, September 6, 2024

MUSIC TALKS - MUZHUMADHI AVALADHU MUGAM AAGUM , MALLIGAI AVALADHU MANAM AAGUM - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

முழுமதி அவளது முகமாகும் மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும் மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

அவளை ஒரு நாள் நான் பார்த்தேன் இதயம் கொடு என வரம் கேட்டேன்
அதை கொடுத்தாள் உடனே எடுத்தே சென்றுவிட்டாள்
ஓஹோ முழுமதி அவளது முகமாகும் மல்லிகை அவளது மணமாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும் 
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

கால்தடமே பதியாத கடல்தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்
கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்தும் மௌனத்தில் நின்றேன்

ஒரு கரையாக அவளிருக்க மறுகரையாக நான் இருக்க
இடையில் தனிமை தளும்புதே நதியாய் 
கானல் நீரில் மீன் பிடிக்க கைகள் நினைத்தால் முடிந்திடுமா ?
நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே !

முழுமதி அவளது முகமாகும் மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும் மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

அமைதியுடன் அவள் வந்தாள் விரல்களை நான் பிடித்து கொண்டேன்
பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்
உறக்கம் வந்தே தலைகோத மரத்தடியில் இளைப்பாறி
கண் திறந்தேன் அவளும் இல்லை கசந்தது நிமிடம் !

அருகில் இருந்தாள் ஒரு நிமிடம் தொலைவில் தெரிந்தாள் மறு நிமிடம்
கண்களில் மறையும் பொய்மான் போல் ஓடுகிறாள்
அவளுக்கும் எனக்கும் நடுவினிலே திரையொன்று தெரிந்தது எதிரினிலே
முகமுடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா ?

முழுமதி அவளது முகமாகும் மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும் மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....