Friday, September 6, 2024

MUSIC TALKS - THULI THULIYAAI KOTTUM MAZHAI THULIYAAI EN IDHAYATHAI IDHAYATHAI NANAITHUVITTAI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




துளி துளியாய் கொட்டும் மழைத்துளியாய் என் 
இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய் 
பார்வையிலே உன் பார்வையிலே 
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்

ஒளி ஒளியாய் வெட்டும் மின்னல் ஒளியாய்
என் ரகசிய ஸ்தலங்களை ரசித்துவிட்டாய் 
ரசித்ததையே நீ ரசித்ததையே என் 
அனுமதி இல்லாமல் ருசித்து விட்டாய்

பூவென நீ இருந்தால் இளம் தென்றலை போல் வருவேன் 
நிலவென நீ இருந்தால் உன் வானம் போலிருப்பேன்
துளி துளியாய் கொட்டும் மழை துளியாய் என் 
இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய் பார்வையிலே
உன் பார்வையிலே ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்

பூமியெங்கும் பூ பூத்த பூவில் நான் பூட்டி கொண்டே இருப்பேன்
பூக்களுக்குள் நீ பூட்டிக் கொண்டால் நான் காற்று போல திறப்பேன்
மேகம் உள்ளே வாழ்ந்திருக்கும் தூறல் போலவே 
நானும் அந்த மேகம் அதில் வாழ்கிறேன்
காற்றழுத்தம் போல வந்து நானும் உன்னைதான்
முத்தம் இட்டு முத்தம் இட்டு போகிறேன்
ஒருவரை ஒருவர் அடிக்கடி தேடி ஆனந்த மழைதனில் 
நனைந்திட நனைந்திட

துளி துளியாய் கொட்டும் மழை துளியாய் என் 
இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய் 
பார்வையிலே உன் பார்வையிலே 
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்

நீலவானில் அட நீயும் வாழ ஒரு வீடு கட்டி தரவா
நீலவானில் என் கால் நடந்தால் விண்மீன்கள் குத்தும் தலைவா
ஓரக்கண்ணில் போதை கொண்டு நீயும் பார்க்கிறாய் 
மேல் உதட்டை கீழ் உதட்டை அசைக்கிறாய்
பூவனத்தை பூவனத்தை கொய்து போகிறாய் 
பெண் இனத்தை பெண் இனத்தை ரசிக்கிறாய்
கனவுகள் வருதே கனவுகள் வருதே காதலியே உன்னை 
தழுவிட தழுவிட

துளி துளியாய் கொட்டும் மழை துளியாய் என் 
இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய் 
பார்வையிலே உன் பார்வையிலே 
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்

No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....