Saturday, September 14, 2024

MUSIC TALKS - ANBE ANBE KOLLADHE ! KANNE KANNAI KILLADHE ! ANBE UN ASAIVIL UYIRAI KUDIKKADHE ! - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன் அசைவில் உயிரைக் குடிக்காதே
அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே

பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன் ஆஹா அவனே வள்ளலடி
மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து ரவிவர்மன் எழுதிய வதனமடி
நூறடிப் பளிங்கை ஆறடியாக்கி சிற்பிகள் செதுக்கிய உருவமடி
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில் நீதான் நீதான் அழகியடி
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து என்னை வதைப்பது கொடுமையடி !

அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே

கொடுத்து வைத்தப் பூவே பூவே அவள் கூந்தல் மணம் சொல்வாயா?
கொடுத்து வைத்த நதியே நதியே அவள் குளித்தச் சுகம் சொல்வாயா?
கொடுத்து வைத்த கொலுசே கால் அழகைச் சொல்வாயா?
கொடுத்து வைத்த மணியே மார் அழகைச் சொல்வாயா?

அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி அங்கே உனக்கொரு வீடு செய்வேன்
உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு உயிருக்கு உயிரால் உறையிடுவேன்
மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்து மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்
தூக்கத்தில் மார்பில் வியர்க்கின்ற போது நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்
பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக 
பனித்துளி எல்லாம் சேகரிப்பேன்
தேவதை குளித்த துளிகளை அள்ளி தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்

அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன் அசைவில் உயிரைக் குடிக்காதே
அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...