திங்கள், 16 செப்டம்பர், 2024

MUSIC TALKS - SOLAI POOVIL MAALAI THENDRAL PAADUM NERAM - AASAI KONDA NENJAM RENDUM AADUM KAALAM - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்
புது நாணம் கொள்ளாமல் ஒரு வார்த்தை இல்லாமல்
மலர் கண்கள் நாலும் மூடிக் கொள்ளும் காதல் யோகம்

சந்தனக் காடு நானுன் செந்தமிழ் ஏடு
மான் விழி மாது நீயோ மன்மதன் தூது
மேகத்துக்குள் மின்னல் போலே நின்றாயே
மின்னல் தேடும் தாழம்பூவாய் நானும் வந்தேனே
தாகம் தீர்க்கும் தண்ணீர் போலே நீயும் வந்தாயே
தாவிப் பாயும் மீனைப் போலே நானும் ஆனேனே
விண்ணில் இல்லா சொர்க்கம் தன்னை உன்னில் இங்கே கண்டேனே
கள்ளில் இல்லா இன்பம் உந்தன் சொல்லில் இங்கே கண்டேனே

சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

செந்நில மேட்டில் தண்ணீர் சேர்ந்தது போலே
ஆனது நெஞ்சம் நீயென் வாழ்க்கையின் சொந்தம்
என்றும் என்றும் எந்தன் உள்ளம் உன்னோடு
எந்தன் நெஞ்சில் பொங்கும் அன்பில் நாளும் நீராடு
கங்கை வெள்ளம் வற்றும்போதும் காதல் வற்றாது
திங்கள் வானில் தேயும்போதும் சிந்தை தேயாது
மண்ணில் தோன்றும் ஜென்மம் யாவும் உன்மேல் அன்பு மாறாது
உன்னை அன்றித் தென்றல் கூட எந்தன் தேகம் தீண்டாது

சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்
புது நாணம் கொள்ளாமல் ஒரு வார்த்தை இல்லாமல்
மலர் கண்கள் நாலும் மூடிக் கொள்ளும் காதல் யோகம்

சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 10

  ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை  கவனித்தத...