Tuesday, September 24, 2024

MUSIC TALKS - PAATUKKU PAATEDUTHTHU NAAN PAADUVADHAI KETTAYO ! VENNILAVE NEE POI THOODHU SOLLA MAATAYO ! - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ ?
துள்ளி வரும் வெள்ளலையே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ ?
கொத்தும் கிளி இங்கிருக்க ஓய் கோவைப் பழம் அங்கிருக்க 
தத்தி வரும் வெள்ளலையே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ ?

கொத்தும் கிளி இங்கிருக்க கோவைப் பழம் அங்கிருக்க 
தத்தி வரும் வெள்ளலையே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ

இளம் வாழம் தண்டாக எலுமிச்சம் கொடியாக 
இருந்தவளைக் கைப் பிடிச்சு இரவெல்லாம் கண் முழிச்சு 
இல்லாத ஆசையிலே என் மனச ஆடவிட்டான்
ஆடவிட்ட மச்சானே ஓடம் விட்டு போனானே 
ஓடம் விட்டு போனானே ஓ ஓ ஓடம் விட்டு போனானே
ஊரெங்கும  தூங்கையிலே நான் உள்மூச்சு வாங்கையிலே
ஹோய் ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடி போய்ச் சொல்லி விடு


மின்னலாய் வகிடெடுத்து மேகமாய்த் தலைமுடித்து 
பின்னலாய் ஜடைபோட்டு என் மனச எடைபோட்டு
மீன் புடிக்க வந்தவளை நான் புடிக்க போறேனே
மை எழுதும் கண்ணாலே பொய் எழுதிப் போனாளே
ஆசைக்கு ஆசை வச்சேன் நான் அப்புறந்தான் காதலிச்சேன் 
ஹோய் ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடிப்போய் சொல்லிவிடு

வாழைப்பூ திரி எடுத்து வெண்ணையிலே நெய் எடுத்து 
ஏழை மனக் குடிசையிலே ஏத்தி வச்சான் ஒரு விளக்கு
ஏத்தி வச்ச கைகளிலே என் மனசை நான் கொடுத்தேன்
நெஞ்சு மட்டும் அங்கிருக்க நான் மட்டும் இங்கிருக்க 
நான் மட்டும் இங்கிருக்க ஹோ ஹோ ஹோ நான் மட்டும் இங்கிருக்க
தாமரை அவளிருக்க இங்கே சூரியன் நானிருக்க
ஹோ சாட்சி சொல்லும் சந்திரனே நீ போய் சேதி சொல்ல மாட்டாயோ

பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ
சாட்சி சொல்லும் சந்திரனே நீ போய் சேதி சொல்ல மாட்டாயோ


No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....