Thursday, September 5, 2024

MUSIC TALKS - NENJIL VARUM KAADHAL VALI POOVIL ORU SOORAAVALIYO !! - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !!




காடு திறந்தே கிடக்கின்றது காற்று மலர்களை உடைக்கின்றது
கண்கள் திறந்தே கிடக்கின்றது காதல் உயிர்களை உடைக்கின்றது
அடடா நெஞ்சில் வரும் காதல்வலி பூவில் ஒரு சூறாவளியோ !

நெஞ்சை விட்டு வந்த வார்த்தை ஒன்று தொண்டைக்குள் சூழ்கொண்டதோ
உன்னை விட்டு உடல் மீளவில்லை என் கால்கள் வேர்கொண்டதோ
பூமிக்கு வந்த பனித்துளி நான் சூரியனே என்னை குடித்துவிடு
யுகம் யுகமாய் நான் எரிந்து விட்டேன் பனித்துளியே என்னை அணைத்து விடு
உறவே உயிரே உணர்வே நெஞ்சில் வரும் காதல் வலி பூவில் ஒரு சூறாவளியோ 

சிற்றின்பத்தின் சின்ன வாசல்வழி பேரின்பம் நாம் அடைவோம்
கால் தடங்கள் அற்ற பூமியிலே காற்றாக நாம் நுழைவோம்
சித்திரை மாதத்தை நான் நனைத்து கோடையில் உனக்கொரு குளிர்கொடுப்பேன் 
மார்கழி மாதத்தை நான் எரித்து முன்பனி காலத்தில் அனல் கொடுப்பேன்
அடியே சகியே சுகியே நெஞ்சில் வரும் காதல் வலி பூவில் ஒரு சூறாவளியோ !

காடு திறந்தே கிடக்கின்றது காற்று மலர்களை உடைக்கின்றது
கண்கள் திறந்தே கிடக்கின்றது காதல் உயிர்களை உடைக்கின்றது
அடடா நெஞ்சில் வரும் காதல்வலி பூவில் ஒரு சூறாவளியோ !

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...