திங்கள், 16 செப்டம்பர், 2024

MUSIC TALKS - THANDHANA THANDHANA THAI MAASAM - ADHU THANDHATHU THANDHATHU ONNUDHAAN - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU



இரு விழி இரு விழி 
இமை கொட்டி அழைக்குது
உயிர் தட்டி திறக்குது 
இறக்கை கட்டி பறக்குதம்மா
இறக்கை கட்டி பறக்குதம்மா
இரு மனம் இரு மனம் 
விட்டு விட்டு துடிக்குது
விண்ணை தொட்டு மிதக்குது
வெட்கம் விட்டு இணைந்ததம்மா

தந்தன தந்தன தை மாசம் 
அது தந்தது தந்தது உன்னைதான்
சந்தன சந்தன மல்லி வாசம் 
தேன் சிந்துது சிந்துது இப்ப தான்
என்னது என்னது இந்த நாணம்
மெல்ல கொல்லுது கொல்லுது என்னைதான்
தொட்டது தொட்டது இப்ப போதும்
அட மத்தது மத்தது எப்பதான்
ஆத்தாடி ஆத்தாடி என் நெஞ்சில் காத்தாடி
அய்யா உன் முகம் பார்க்க என் கண்ணே கண்ணாடி

தந்தன தந்தன தை மாசம் 
அது தந்தது தந்தது உன்னைதான்
சந்தன சந்தன மல்லி வாசம் 
தேன் சிந்துது சிந்துது இப்ப தான்

ஆண் யாரோ ? பெண் யாரோ ?
தெரிய வேண்டுமா ? நீ சொல்
யார் மீது யார் யாரோ ? 
புரிய வேண்டுமா நீ சொல்
என் காது இரண்டும் கூச 
வாய் சொன்னதென்ன நீ சொல்
அந்த நேரம் என்ன பேச 
அறியாது போதை நீ சொல்

ஒரு பூ அறியாமல் 
தேன் திருடிய ரகசியம் 
நீயே சொல்
இனி என்ன நான் செய்ய 
இதழோரம் சொல்வாயா
இடைவேளை நீ தந்து 
இமை தூங்க செல்வாயா

தந்தன தந்தன தை மாசம் 
அது தந்தது தந்தது உன்னைதான்
சந்தன சந்தன மல்லி வாசம் 
தேன் சிந்துது சிந்துது இப்ப தான்

ஆகாயம் போதாதே 
உனது புகழையும் தீட்ட
அன்பே உன் கண் போதும் 
எனது உயிரையும் பூட்ட
உன் கண்களோடு நானும் 
முகம் பார்த்து வாழ வேண்டும்
உன்னை பார்த்து பார்த்து வாழ 
நகக்கண்ணில் பார்வை வேண்டும்
உன் கையில் உயிர் வாழ்ந்தேன் 
இது தவமா ? வரமா ? புரியவில்லை
உன்னோடு என் சொந்தம் 
ஈரெழு ஜென்மங்கள்
உன் வார்த்தை இது போதும் 
வேண்டாமே சொர்க்கங்கள்

தந்தன தந்தன தை மாசம் 
அது தந்தது தந்தது உன்னைதான்
சந்தன சந்தன மல்லி வாசம் 
தேன் சிந்துது சிந்துது இப்ப தான்
என்னது என்னது இந்த நாணம்
மெல்ல கொல்லுது கொல்லுது என்னைதான்
தொட்டது தொட்டது இப்ப போதும்
அட மத்தது மத்தது எப்பதான்
ஆத்தாடி ஆத்தாடி என் நெஞ்சில் காத்தாடி
அய்யா உன் முகம் பார்க்க என் கண்ணே கண்ணாடி


கருத்துகள் இல்லை:

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...