Saturday, September 21, 2024

MUSIC TALKS - POOVE SEMPOOVE UN VAASAM VARUM VAASAL EN VAASAL ORU POONGAAVANAM - VAAI PESIDUM PULLANGULAL - NEEDHAN ORU POOVIN MADAL - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதான் ஒரு பூவின் மடல்
பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே

நிழல் போல நானும் நிழல் போல நானும் நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது

நான் வாழும் வாழ்வே உனக்காகதானே 
நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே 
எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே 
வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல்

பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதான் ஒரு பூவின் மடல்
பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே

உன்னைப்போல நானும் ஒரு பிள்ளைதானே 
பலர் வந்து கொஞ்சும் கிளி பிள்ளை தானே
உனைப்போல நானும் மலர் சூடும் பெண்மை 
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை

நான் செய்த பாவம் என்னோடு போகும் 
நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும் 
இந்நாளும் எந்நாளும் உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல்

பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதான் ஒரு பூவின் மடல்
பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே


No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....