Monday, September 23, 2024

MUSIC TALKS - THIRUMBA THIRUMBA PAARTHU PAARTHU THIRUMBA THIRUMBA PESI PESI THIRUMBA THIRUMBA KADHAL SOLLUM - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU

திரும்ப திரும்ப பார்த்து பார்த்து திரும்ப திரும்ப பேசி பேசி 
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா
திரும்ப திரும்ப கடிதம் போட்டு திரும்ப திரும்ப இதயம் கேட்டு
திரும்ப திரும்ப உயிரை கொல்லும் நினைவு காதலா

இமைக்கும்போது உன் முகம் தெரிவதில்லை வாடினேன் 
இமைகள் ரெண்டை நீக்கிடும் மருத்துவங்கள் தேடினேன்
உயிரை கொண்டு உன்னை மூடினேன் 

திரும்ப திரும்ப பார்த்து பார்த்து திரும்ப திரும்ப பேசி பேசி 
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா

உந்தன் வண்ண சேலையை காற்று கொண்டு போனதோ 
காற்று கொண்டு போனதை மேகம் வாங்கி கொண்டதோ 
வாங்கி கொண்ட சேலைதான் வானவில்லும் ஆனதோ

முத்தம் வைத்து கொள்வதை வானம் என்ன எண்ணுதோ 
எண்ணி வைத்த புள்ளிகள் நட்சத்திரம் ஆனதோ
உந்தன் பேரை சொல்வதில் கோடி இன்பம் கூடுதோ

காதலித்து பார்க்கையில் இதயம் நின்று போகுமே
இதயம் நின்று போயினும் ரத்த ஓட்டம் ஓடுமே
பிறப்பு போல இறப்பு போல ஒரு முறைதான் காதல் தோன்றுமே 

கவிஞன் மனசு போல நீ துருவி துருவி பார்க்கிறாய் 
கிராம மண்ணின் தென்றலாய் உரசி உரசி கேட்கிறாய்
இந்த மென்மை ஆண்மையே உன்னை எண்ணி ஈர்த்தது

மேஜை விளக்கு போல நீ தலை குனிந்து போகிறாய் 
கோடை கால மேகமாய் கொஞ்சம் கொஞ்சம் பேசுறாய் 
இந்த தன்மைதானடி என்னை உன்னில் கோர்த்தது

இதய துடிப்பு என்பதே நிமிஷத்துக்கு என்பது
உன்னை பார்க்கும்போது தான் நூறு மடங்கு கூடுது
வெட்கம் பாதி சொர்க்கம் பாதி மாறி மாறி வந்து போனது

திரும்ப திரும்ப பார்த்து பார்த்து திரும்ப திரும்ப பேசி பேசி 
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா
திரும்ப திரும்ப கடிதம் போட்டு திரும்ப திரும்ப இதயம் கேட்டு
திரும்ப திரும்ப உயிரை கொல்லும் நினைவு காதலா

இமைக்கும்போது உன் முகம் தெரிவதில்லை வாடினேன் 
இமைகள் ரெண்டை நீக்கிடும் மருத்துவங்கள் தேடினேன்
உயிரை கொண்டு உன்னை மூடினேன் 

திரும்ப திரும்ப பார்த்து பார்த்து திரும்ப திரும்ப பேசி பேசி 
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா

No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....