Monday, September 16, 2024

MUSIC TALKS - MUDHAL NAAL INDRU EDHUVO ONDRU VERAAGA ENNAI MAATALAAM ANGANGU ANAL YETRALAAM - TAMIL SONG LYRICS ! - VERA LEVEL PAATU !



முதல் நாள் இன்று எதுவோ ஒன்று 
வேறாக உனை மாற்றலாம் அங்கங்கு அனல் ஏற்றலாம்
என் உள்ளம் பாடுகின்றது யார் சொல்லி கற்று கொண்டது
நில் என்றால் சட்டென்று நிற்காதம்மா 
நான் என்ன சொன்னாலும் கேட்காதம்மா
முதல் நாள் இன்று எதுவோ ஒன்று 
வேறாக உனை மாற்றலாம் அங்கங்கு அனல் ஏற்றலாம்

திசை தோறும் கூறுகின்ற உண்மை
குளிர்போலே காதல் மேகம் மேன்மை
தீண்டும் வரையில் தித்திக்காதோ சொல் உள்ளம்

முழுதாக மூழ்கியதும் இல்லை
முழுகாமல் மிதந்ததும் இல்லை
காதல் கடல் விழுந்தவர்தான் இந்நிலை !

வெகு தூரம் வந்தேன்
காதல் கிருமிகள் நெருங்காமல்

முதல் நாள் இன்று எதுவோ ஒன்று
லேசாக எனை மாற்றலாம்
அங்கங்கு அனல் ஏற்றலாம்

இளம் நெஞ்சில் காதல் விதை தூவு
இல்லையேல் நீ தன்னந்தனி தீவு
வாழ்க்கை ஒரு சுமையானால் நோ சொல்லு

உதட்டாலே காதல் எனும் சொல்லை
உரைத்தாலே கூட வரும் தொல்லை
வாழும் மட்டும் விழிகளின் தூக்கம் கெடும்
சுகம் எது வாழ்வில் ? காதல் வலியை சுமக்காமல்

முதல் நாள் இன்று எதுவோ ஒன்று 
வேறாக உனை மாற்றலாம் அங்கங்கு அனல் ஏற்றலாம்

உப்புக்கல் வைரம் என்றுதான் 
காட்டிடும் காதல் ஒன்றுதான் 
உண்டாகும் இன்பங்கள் உச்சம் உச்சம்
என்றாலும் துன்பம் தான் மிச்சம் மிச்சம்




No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...