ஷாகோ படத்தோடு கொடுத்த கனேக்ஷன், TRAVELLING SOLIDER பாட்டு, மொரட்டு வாள் காட்சிகள், ஜெயிலர் படம் பாணியில் மாஸ் கிளைமாக்ஸ் என்று பக்கா மசாலா படம் ஹீரோ அரசியலுக்கு போகப்போவதாலோ என்னவோ கொஞ்சம் சென்ட்டிமென்ட் தூக்கலாக கொடுக்கப்பட்டது 3 மணி நேரம் பக்கமாக இழுக்கப்பட்டு உள்ளது, அர்ஜூன் தாஸ் டீசண்ட் பெர்ஃபார்மன்ஸ், ஒரு செகண்ட் வில்லன் அவதாரம் தப்பித்தது, மற்றபடி காமெரிசியல் KGF , SALAAR படங்களின் பாணியில் ஒரு சராசரி ஸ்டைல் நம்பி எடுக்கப்பட்ட படம், GOOD BAD UGLY படத்தை விட மோசமாக இல்லை !! படம் மொத்தமாக வன்முறையாக கதை இருக்கிறது, சென்ட்டிமென்ட் , காதல் காட்சிகள் தேவையற்ற இலவச இணைப்பாக இருக்கிறது, இந்த திரைப்படம் மும்பையின் கட்டுப்படுத்தும் கும்பல் 90 களின் நடத்திய அராஜக உலகத்தை மையமாகக் கொண்ட ஒரு கடுமையான கதை. இதில் ஒஜஸ் கம்பீரா என்ற பெயரால் அச்சமூட்டிய ஒரு புகழ்பெற்ற கும்பல் தலைவன்தான் நம்ம ஹீரோ பவன், கொலை முயற்சியில் உயிர் தப்பிய பின், தனது தம்பியை வேறு இழந்த வேதனையால், பத்து ஆண்டுகள் தன்னைத்தானே ஒதுக்கிக் கொண்டு மறைந்து விடுகிறார். பின்னாட்களில் மனைவியும் வில்லங்கலால் மேலோகம் அனுப்பப்பட்ட பின்னால் கொதித்து எழுந்து பிரகாஷ் ராஜ் குடும்பத்தில் பிரச்சனை என்று புரிந்து அந்த நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அவர் மீண்டும் மும்பைக்கு திரும்புகிறார் முழுமையாகக் காயங்களால் சிதைந்தாலும், மன உறுதியால் உடையாதவராக. திரும்பியவுடன் கேடுகெட்ட சம்பவங்களில் கும்பல் தலைவர்களை பழிவாங்கத் தொடங்குகிறார், அவரது எதிரிகள் துறைமுகங்களையும் கடத்தல் வழிகளையும் கைப்பற்றிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தவே கடைசியாக ஜெயிப்பாரா இல்லையா என்பதே கதை, கம்பீரா தனது சொந்த ஜப்பானிய சண்டை கும்பலை உருவாக்குகிறார். பழைய பகுதிகளை மீண்டும் கைப்பற்றி, எதிரிகளுக்கு எதிராகக் கொடூரமான தாக்குதல்களை நடத்துகிறார். OG வருகிறார், சண்டை போடுகிறார், செல்கிறார் என்பதே ரிப்பீட் மோடில் நடந்தாலும் பவன் அவர்களிடம் இருந்து கொஞ்சமாக கால் ஷீட் வாங்கி நிறுவனம் குறை சொல்லாத அளவுக்கு ஒரு மிதமான ஆக்ஷன் டிராமாவை கொடுத்த இயக்குனரை பாராட்டலாம்,
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
காலத்தின் பயணத்தில் தமிழ் சினிமா ! #16
நடிகர் மொட்டை ராஜேந்திரனின் வாழ்க்கைப் பயணத்தில், வில்லன் வேடத்திலிருந்து நகைச்சுவை நட்சத்திரமாக மாறிய விதம் மிகவும் சுவாரஸ்யமானது. ஆரம்பத...
-
இந்தப் படத்தைப் பற்றிப் பாராட்டி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால், இந்தப் படத்தின் காட்சியமைப்பு, இசை மற்றும் தயாரிப்புப் பணிகள் வேறு லெவல்லி...
-
வாடா வாடா வெள்ளை பூவே கொண்டு போடா வெள்ளி தீவே ! தெரிக்கும் தேன்மலை சிரிக்கும் கண்களின் மீது தாக்குதே ஏதோ ஏதோ ஏதோ ஆனேன் வாடா வாடா செல்...
2 கருத்துகள்:
இப்ப எல்லாம் என்னதான் நினைச்சுட்டு இப்படி எல்லாம் படம் எடுக்கறாங்கன்னு தெரியல, படம் கதைன்னு எதுவுமே இல்லை, ஆண்டவர் தக் லைப்ல சொதப்புன மாதிரி சொதப்பாததுதான் ஒரே நல்ல விஷயம், சப்பானை கண்ணுல காட்டுனாங்க. சொல்ல வந்த மெசேஜ் என்ன ? பெரிய ஆளுங்க சண்டபோட்டா பயந்து இருக்கணும், இதுதான் வருங்காலத்து பசங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய விஷயமா ? இதுக்கு எதுக்கு காலேஜ் எல்லாம் ?
மாடு மேய்க்கற அளவுக்குதான் மூளை இருக்கணும் , பணக்கார இடத்து விவகாரத்துல பயந்து இருக்கனும் , நல்லா இருக்குடா உங்க புஷ்பா படத்து நியாயம் 🤦♂️
கருத்துரையிடுக