அன்பரசு என்ற இளைஞனை, அவரது தாய், கிராமத்தில் நிலவும் இரு சக்திவாய்ந்த குடும்பங்களின் பழைய பகையைத் தவிர்க்கும் வகையில், மறைத்து வளர்க்கிறார்.
அவர் தனது மகன் அந்த பழிவாங்கும் சுழற்சியில் சிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக, வம்சத்தின் உண்மையை மறைக்கிறார். ஆனால் அன்பரசு கல்லூரி படிப்பிற்காக கிராமத்திற்குத் திரும்பும்போது, மலர்கொடி மீது காதல் கொள்ளுகிறார்.
இந்த காதல் நன்றாக செல்லும்போது அன்பரசு எதிரிகளை எதிர்த்து தாக்க திருவிழா நேரம் இந்த குடும்பங்களின் பழைய பகையை மீண்டும் தூண்டுகிறது, அன்பரசு தனது குடும்பத்தின் உண்மையை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்.
பகை மீண்டும் தீவிரமடையும் நிலையில், அன்பரசு தனது காதலியையும் நண்பர்களையும் காப்பாற்ற, வம்சத்தின் சுமையை ஏற்றுக்கொள்கிறார். இறுதியில், தனது குடும்பத்தைத் துன்புறுத்தியவர்களைத் தண்டித்து, வம்சத்தின் பாரம்பரியத்தை ஏற்றுக்கொள்கிறார். வம்சம்
வம்சம் போன்ற ஆழமான பழிவாங்கும் ட்ராமாக்கள் நமது சினிமாவில் குறைவுதான். இருந்தாலும் படத்தின் நகைச்சுவை காட்சிகளும் சுவாரஸ்யமான பாடல்களும் பின்னணி இசையும் அடுத்த லெவல்லில் இந்த படத்தை கொண்டு சேர்த்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக