\\
இந்த படம் செம்ம காமெடியான மலையாள திரைப்படம், சுறுசுறுப்பாக இணைய காணொளிகளை பண்ணும் லூக் என்ற சாதாரண மனிதனின் வாழ்க்கை சில அதிர்ச்சிகரமான சம்பவங்களால் சிதறி விடுகிறது.
ஆரம்பத்தில், அவன் எதிர்கொள்ளும் சம்பவங்களை கருப்பு நகைச்சுவை பாணியில் படம் காட்டுகிறது. ஆனால் அடுத்த் அடுத்த ட்விஸ்ட்டில அசம்பாவிதம் செய்யும் ஒரு ஆளிடம் சிக்கிக்கொள்ளும் கட்டத்தில் பார்வையாளர்கள் சிரிப்பதா அல்லது பயப்படுவதா என்று குழப்பமடையும் வகையில் கதை நகர்கிறது.
காதலியை ஒரு வழக்கில் சிக்காமல் காப்பாற்றுகிறேன் என்று லூக்கின் பைத்தியக்காரத்தனம் அதிகரிக்கும்போது, அவன் மோசமான ஒரு ஆளின் வன்முறையின் வலைக்குள் சிக்கிக் கொள்கிறான். அதன் பின்னால்தான் செம்ம காமெடி.காட்சிகள், பஸ் டிரைவர் , நடத்துனர், காவல் ஆய்வாளர் என்று கதையில் வேகமாக நகைச்ச்சுவையும் திரைக்கதையும் நகர்ந்தது பிளஸ் பாயிண்ட்.
குறிப்பாக நம்ம சமூகத்தின் அபத்தங்களை நையாண்டி செய்யும் விதமாக கதை நகர்கிறது. துணை கதாபாத்திரங்கள் (அனிஷ்மா அனில்குமார், பாபு ஆன்டனி போன்றோர்) சந்தேகத்தையும், நெறிமுறையையும் சிக்கலாக்கி, கதையின் பதட்டத்தை அதிகரிக்கின்றனர்.
இந்த படத்தின் ஸ்பெஷல் என்றால் காமெடி கலந்து மனிதர்களின் மனநிலையின் அபத்தத்தையும், நகைச்சுவை மற்றும் துயரம், புத்திசாலித்தனம் மற்றும் பைத்தியம் ஆகியவற்றின் மெல்லிய கோட்டையும் வெளிப்படுத்துகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக