2004 டிசம்பர் 26 அன்று, பிரிட்டனில் Surrey மாநிலத்தில் உள்ள Danes Hill பள்ளியில் புவியியல் பாடத்தில் சுனாமி குறித்த எச்சரிக்கை அறிகுறிகளை கற்றிருந்த 10 வயது சிறுமி TILLY SMITH, தனது குடும்பத்துடன் தாய்லாந்தின் Phuket பகுதியில் உள்ள MAI KHAO BEACH கடற்கரையில் விடுமுறையில் இருந்தபோது, கடல் திடீரென பின்வாங்கி, நீர் அசாதாரணமாகக் குமிழ்த்து, அலைகள் இயல்பான ஓட்டத்தில் இல்லாமல் நடந்ததை கவனித்தாள்; அவள் உடனே தனது பெற்றோரிடம் இது சுனாமி வரப்போகும் அறிகுறி என்று தெரிவித்தாள், முதலில் பெற்றோர் சந்தேகப்பட்டாலும், அவள் பள்ளியில் கற்றதைத் தெளிவாக நினைவுபடுத்தி வலியுறுத்தியதால், பெற்றோர் ஹோட்டல் ஊழியர்களுக்கும் மற்ற கடற்கரை பயணிகளுக்கும் எச்சரிக்கை செய்தனர், சில நிமிடங்களில் சுமார் 100 பேர் கடற்கரையை விட்டு வெளியேறினர், பின்னர் சுனாமி தாக்கியபோது கடற்கரை வெறிச்சோடியிருந்ததால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன
இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பரவலாகப் பாராட்டப்பட்டது, கல்வி உயிர்களை காப்பாற்றும் சக்தி கொண்டது என்பதை நிரூபித்தது, TILLY SMITH பல விருதுகளைப் பெற்றார், அதில் தாமஸ் க்ரெ ஸ்பெஷல் அவார்டு, பிரான்ஸ் நாளிதழ் MON QUOTIDIEN வழங்கிய இந்த வருடத்தின் சிறந்த குழந்தை” பட்டம், மேலும் 20002 TILLYSMITH என்ற சிறு கோள் அவரின் பெயரில் அழைக்கப்பட்டது; அவள் ஐக்கிய நாடுகள் மேடையிலும் பேச அழைக்கப்பட்டு, பேரிடர் விழிப்புணர்வு மற்றும் கல்வியின் முக்கியத்துவத்தை உலகளவில் வலியுறுத்தினார்; இந்தச் சம்பவம், தொழில்நுட்பம் மட்டுமல்லாமல், அறிவு மற்றும் விழிப்புணர்வும் பேரிடர் தயாரிப்பில் அத்தியாவசியம் என்பதை நினைவூட்டியது, மேலும் உலகம் முழுவதும் பள்ளிகளில் சுனாமி மற்றும் இயற்கை பேரிடர் எச்சரிக்கை அறிகுறிகளை குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்ற கல்வி இயக்கங்களை ஊக்குவித்தது; இவ்வாறு, 10 வயது சிறுமி தனது அறிவும் துணிச்சலும் மூலம் நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றி, உலகளவில் விழிப்புணர்வு மற்றும் தயாரிப்பின் சின்னமாக மாறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக