புதன், 31 டிசம்பர், 2025

CINEMA TALKS - RAJAPATTAI - TAMIL REVIEW - THIRAI VIMARSANAM !!






அனல் முருகன் (விக்ரம்) என்ற உடற்பயிற்சி வல்லுநர் மற்றும் வாய்ப்பு தேடும் திரை நடிகர் என்பவரை சுற்றி நகர்கிறது. சினிமாவில் வில்லனாக நடிக்க வேண்டும் என்ற கனவு கொண்ட அவர், வாழ்க்கையில் சின்னச் சின்ன சண்டைகளில் ஈடுபட்டு, காமெடி கலந்த சுறுசுறுப்பான இளைஞராக வாழ்கிறார். ஆனால், ஒரு முதியவரை (கே. விஸ்வநாத்) சந்தித்ததும், அவரது நிலத்தை கையகப்படுத்த முயலும் மாபியா டான் மற்றும் ஊழல் அரசியல்வாதிகளின் சதியில் சிக்கிக்கொள்கிறார். இதுவே கதையின் முக்கிய திருப்பமாகிறது. அனல் முருகன், முதியவரின் நிலத்தை காப்பாற்றும் முயற்சியில், பல்வேறு வில்லன்களுடன் மோதுகிறார். அரசியல், மாபியா, நிலம் கையகப்படுத்தல் போன்ற சமூக பிரச்சினைகள் கதையின் மையமாகின்றன. இதற்கிடையில், நாயகி (தீக்ஷா சேத்) கதையில் காதல் மற்றும் கவர்ச்சியைச் சேர்க்கிறார். முருகனின் கனவு சினிமா வில்லனாக நடிப்பது நிஜ வாழ்க்கையில் வில்லன்களை எதிர்த்து போராடும் விதமாக மாறுகிறது. கதையின் இறுதியில், முருகன் வில்லன்களை வெற்றி கொண்டு, முதியவரின் நிலத்தை மீட்டுத் தருகிறார். சமூகத்தில் நிலம் கையகப்படுத்தும் பிரச்சினையை வெளிப்படுத்தும் வகையில், படம் ஒரு வணிக மசாலா எண்டர்டெய்னராக முடிகிறது. ஆக்ஷன், காமெடி, காதல், சமூக கருத்துக்கள் அனைத்தும் கலந்த கதை, விக்ரமின் ஆற்றல் மிக்க நடிப்பால் ரசிகர்களை ஈர்க்கிறது. இருந்தாலும் ஒரு கமெர்ஷியல் படமாக வெகுவாக சலிப்பு தட்டும் படமாக இருக்கிறது. வணிக அளவில் வெற்றி அடையாமல் போக அதுவும் ஒரு காரணம். விக்ரம் அவர்களின் மற்ற படங்களில்  அளவுக்கு எதிரிபார்ப்பு, புதிய லுக், மாறுபட்ட மார்க்கெட்டிங் போன்றவைகளும் இந்த படத்தை ஒரு வழி செய்துவிட்டது என்றே சொல்லலாம் ! 

கருத்துகள் இல்லை:

MUSIC TALKS - THITHI THIDAVE ORU MURAI MUTHAM KODUPAYA ? - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !!

  தித்திடவே தித்திடவே ஒரு முறை முத்தம் கொடுப்பாயா? கொடுப்பாயா ? கொடுப்பாயா? பத்திக்கிடவே பத்திக்கிடவே பல முறை இன்பம் எடுப்பாயா? காட்டும் பொழ...