சென்ற படங்களில் பழிவாங்க வேண்டும் என்று களத்தில் குதித்து ஒவ்வொரு முறையும் பெரிய லெவல்லில் சேதாரம் அடைந்து கடைசியாக ஜெயிக்கும் ஹீரோவான நமது வேட் வில்சன் (டெட்பூல்) இப்போது கார் நிறுவனத்தில் சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்து அமைதியான வாழ்க்கையை வாழும் நிலையில் தொடங்குகிறது.
ஆனால் டைம் வேரியன்ஸ் ஆத்தாரிட்டி (லோகி - சீசன் 1 மற்றும் சீசன் 2 பார்க்கவும்) (TVA) தலையீடு செய்து, முக்கியமான ஹீரோவான வுல்வரின் இல்லாமல் அவரது பிரபஞ்சம் அழிக்கப்படும் அபாயத்தில் இருப்பதை வெளிப்படுத்துகிறது.
தனது உலகத்தை காப்பாற்ற, டெட்பூல் மற்றொரு பிரபஞ்சத்தில் இருந்து விருப்பமில்லாமல் வாழும் லோகன் (வுல்வரின்) என்பவரை இணைத்துக் கொள்கிறார். இவர்களின் முரண்பாடான கூட்டணி, காலவரிசைகளையும் பிரபஞ்சங்களையும் கடந்து செல்லும் அமைப்புக்கும் தனக்கு கட்டுப்படாத சக்தியாளர்களை தீர்த்துக்கட்டும் வில்லி கேஸன்டராவுக்கும் இடையில் இன்ஸ்டடில் கிடைத்த சூப்பர்ஹெரோ குழுவோடு இணைந்த சாகசத்திற்கு வழிவகுக்கிறது.
டெட்பூலும் வுல்வரினும், டெட்பூலின் பிரபஞ்சத்தை அழிக்க முயலும் TVA அதிகாரி பராடாக்ஸை எதிர்கொள்கிறார்கள். பயணத்தின் போது பல நண்பர்களையும் எதிரிகளையும் சந்தித்து, வெடிக்கும் போர்களிலும் நகைச்சுவை உரையாடல்களிலும் விருப்பமே இல்லாமல் சிக்கிக் கொள்கிறார்கள். உச்சக்கட்டத்தில், பிரபஞ்ச அழிவைத் தடுக்க அவர்கள் போராட, நட்பு, தியாகம், விதியின் அபத்தம் ஆகியவற்றை வலியுறுத்தும் கதை கண்டிப்பாக பெரியவர்கள் பார்க்கும் படம்தான். டிஸ்னி இந்த படத்தை வெளியிட்டது உலக அதிசயம் என்றே சொல்லலாம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக