நிறைய வருடங்கள் கடந்த பிறகும் பள்ளி கல்லூரி நட்புகளை பிரியாமல் என்று கேரி கிங் தனது பழைய நண்பர்களை மீண்டும் ஒன்றிணைக்கிறார்.
நடுத்தர வயதான கேரி கிங் தனது இளமைக் கால நினைவுகளை மீண்டும் அனுபவிக்க விரும்புகிறார். பள்ளி நாட்களில் முடியாமல் போன “கோல்டன் மைல் சேலஞ்ச் என்ற பப்-க்ரால் அதாவது 12 பப்களில் தொடர்ந்து குடிப்பது என்ற சவாலை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் முடிவு செய்கிறார்.
அதற்காக, தனது பழைய நண்பர்கள் ஆண்டி, ஸ்டீவன், ஒலிவர், மற்றும் பீட்டரை அழைத்து, சாண்டன் என்ற சொந்த ஊருக்கு திரும்புகிறார். ஆரம்பத்தில், நண்பர்கள் விருப்பமின்றி சேர்ந்தாலும், கேரியின் பிடிவாதம் அவர்களை அந்த பயணத்தில் ஈடுபடுத்துகிறது. சாண்டனில் அந்நியர்களின் ரகசியம் வெளிப்படுகிறது. அந்நியர்கள் என்றால் ஏலியன்கள்,
அவர்கள் பப்களைச் சுற்றத் தொடங்கும்போது, சாண்டன் கிராமம் விசித்திரமாக அமைதியாகவும், மக்கள் அனைவரும் ஒரே மாதிரி நடந்து கொள்வதாகவும் தெரிகிறது. விரைவில், அவர்கள் உணர்கிறார்கள் கிராம மக்கள் அனைவரும் அந்நியர்களால் மாற்றப்பட்டுள்ளனர்.
மனிதர்களை “பிளாங்க்ஸ்” எனப்படும் அந்நிய உருவங்கள் பிடித்து, அவர்களை ஒரே மாதிரி, கட்டுப்படுத்தப்பட்டவர்களாக மாற்றுகின்றன. கேரியும் நண்பர்களும், குடிப்போட்டியைத் தொடரும் போதே, அந்நியர்களுடன் போராட வேண்டிய நிலை உருவாகிறது.
சிரிப்பும், சண்டையும், குழப்பமும் கலந்த சூழலில், அவர்கள் தங்கள் நட்பையும், வாழ்க்கைத் தேர்வுகளையும் மறுபரிசீலனை செய்கிறார்கள்.
இறுதியில், கேரி கிங் தனது பிடிவாதத்தால் தி ஒர்ல்ட்ஸ் எண்டு என்ற கடைசி பபை அடைகிறார். அங்கு, அந்நியர்களின் “நெட்ஒர்க்” என்ற அமைப்புடன் நேரடியாக மோதுகிறார்.
கேரி, மனிதர்களுக்கு சுதந்திரம் வேண்டும், கட்டுப்பாடற்ற வாழ்க்கையே உண்மையானது என்று வலியுறுத்துகிறார். அந்நியர்கள், மனிதர்களை விட்டுவிட்டு, பூமியை விட்டு வெளியேறுகிறார்கள். ஆனால் அதன் விளைவாக, உலகம் குழப்பத்தில் மூழ்குகிறது; தொழில்நுட்பம் சிதறுகிறது, நாகரிகம் சீர்குலைகிறது.
படம் முடிவில், கேரி இன்னும் தனது சுதந்திரமான வாழ்க்கையைத் தொடர்கிறார், நண்பர்கள் தங்கள் வாழ்க்கையை புதிய பாதையில் அமைத்துக் கொள்கிறார்கள். இந்த படம் போதுமான நகைச்சுவை, சயின்ஸ்-ஃபிக்ஷன், மற்றும் நட்பு பற்றிய சிந்தனையை கலந்த தனித்துவமான படம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக