2013-இல், உலகின் மிகப்பெரிய சாண்ட்விச்சு சங்கிலியான SUBWAY உணவு நிறுவனம், அதன் பிரபலமான “FOOTLONG” [FOOTLONG சாண்ட்விச்சு என்றால், அது ஒரு அடி (12 அங்குலம்) நீளமான சாண்ட்விச்சு] என்று பொருள். சாண்ட்விச்சுகள் 12 அங்குலம் நீளமாக இருக்கும் என விளம்பரப்படுத்தப்பட்டிருந்தாலும், உண்மையில் சில சாண்ட்விச்சுகள் 11 அங்குலம் அல்லது அதற்கு குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், பெரும் சர்ச்சைக்குள்ளானது; இந்த விவகாரம் முதலில் ஆஸ்திரேலியாவில் ஒரு இளைஞர் தனது SUBWAY உணவு நிறுவனம் சாண்ட்விச்சை அளவுகோலுடன் ஒப்பிட்டு எடுத்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டபோது வைரலானது, பின்னர் அமெரிக்காவில் பல வாடிக்கையாளர்கள் SUBWAY உணவு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர், அவர்கள் SUBWAY உணவு நிறுவனத்தின் விளம்பரம் தவறானது என்றும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை மீறுவதாகவும் வாதிட்டனர்; SUBWAY உணவு நிறுவனம், ரொட்டியின் நீளம் இயற்கையான பேக்கிங் செயல்முறைகளால் சிறிது மாறுபடலாம் என்று விளக்கினாலும், வழக்கு பெரும் கவனத்தை ஈர்த்தது, நிறுவனத்தின் நம்பகத்தன்மை மற்றும் நுகர்வோர் உரிமைகள் குறித்து உலகளவில் விவாதம் எழுந்தது; பல ஆண்டுகள் நீண்ட வழக்கின் முடிவில் SUBWAY உணவு நிறுவனம், தரக் கட்டுப்பாட்டை மேம்படுத்தவும், ரொட்டியின் நீளத்தை வழக்கமாகச் சரிபார்க்கவும், பேக்கிங் தரத்தை உயர்த்தவும், மேலும் வழக்குத் தொடர்பான சட்டச் செலவுகளைச் செலுத்தவும் ஒப்புக்கொண்டது, ஆனால் வாடிக்கையாளர்களுக்கு நேரடி நிதி இழப்பீடு வழங்கப்படவில்லை; இறுதியில், இந்த வழக்கு சமூக ஊடகங்களின் சக்தி, விளம்பரங்களில் உண்மைத்தன்மையின் அவசியம், மற்றும் ஒரு அங்குலம் குறைந்த ரொட்டி போன்ற சிறிய குறைகள் கூட உலகளாவிய பிராண்டுகளை பல மில்லியன் டாலர் சட்டப்போராட்டங்களில் ஈடுபடுத்தி, அவர்களின் நடைமுறைகளை மாற்ற வைக்கும் என்பதை வெளிப்படுத்தியது. வியாபாரம் என்றால் வாடிக்கையாளருக்கு கொடுக்கும் ப்ரோமிஸ் மிகவும் முக்கியமானது மக்களே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக