டொமினிக் ஒரு அதீத திறமை மிக்க முன்னாள் உயர் காவல்துறை அதிகாரி. ஒரு குறையை மறைக்க செய்த தவறுகளால் அவர் புகழ் கெட்டுவிட்டது. தற்போது தனியார் டிடெக்டிவாக வேலை செய்கிறார்.
வீட்டு உரிமையாளர் கேட்டுக்கொண்டதால் ஒரு சாதாரண வேலை போலத் தோன்றும் ஒரு பெண்களின் கைபையை யாருடையது என்று கண்டுபிடிக்க வேண்டும் என்ற பணியை ஏற்றுக்கொள்கிறார்.
ஆனால் அந்த பை, காணாமல் போனவர்கள், தொடர்ச்சியான கொலைகள், மர்மமான பின்தொடர்பவர் ஆகியவற்றோடு இணைந்திருப்பதை அவர் அறிகிறார். அசிஸ்டன்ட் பதவியில் சேரும் விக்னேஷ் கொஞ்சம் உதவவே ஒரு பெரிய தேடுதல் பயணத்தை மேற்கொண்டு குற்றவாளியை நெருங்குகிறார்.
அந்த பை, அவரை ஏமாற்றங்களும் அபாயங்களும் நிறைந்த வலையில் இழுத்துச் செல்கிறது. . சஸ்பென்ஸ், நகைச்சுவை, மீட்பு ஆகியவற்றை கலந்த டொமினிக் என்ற இந்த படம் கண்டிப்பாக சினிமா வரலாற்றில் சுவாரஸ்யமாக இருக்கும் ஒரு அடிஷன்
அந்த விசாரணையின் போது, டொமினிக் நந்திதா என்ற நடனக் கலைஞரை சந்திக்கிறார். அவளின் மர்மமான நடத்தை, மறைக்கப்பட்ட கடந்தகாலம் அவள் பாதிக்கப்பட்டவளா அல்லது சதி செய்பவளா என்ற கேள்வியை எழுப்புகிறது.
டொமினிக் தனது நகைச்சுவை உணர்வு மிக்க பேச்சுக்களாலும் கவனம் கொண்டு அனைத்து விஷயங்களையும் கலந்து யோசிக்கும் வித்தியாசமான முறைகளும் கொண்டு விசாரணையை முன்னெடுக்கிறார்.
ஒவ்வொரு குறியீடும் அவரை உண்மைக்குக் கொண்டு செல்கிறது. அதே சமயம், தனது காவல்துறை தோல்விகளை எதிர்கொண்டு, மீட்பு பாதையைத் தேடுகிறார்.
கதையின் உச்சக்கட்டத்தில், அந்த பை எவ்வாறு பெரிய குற்றவியல் செயலோடு தொடர்புடையது என்பதை வெளிப்படுத்துகிறது. டொமினிக் தனது உறுதியால் கொலைகளின் உண்மையையும், பின்தொடர்பவரின் நோக்கத்தையும் வெளிச்சமிடுகிறார். இதன் மூலம் அவர் தனது மதிப்பையும் மீட்டுக்கொள்கிறார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக