வெள்ளி, 26 டிசம்பர், 2025

MUSIC TALKS - VAAN NILA NILA ALLA - UN VAALIBAM NILAA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

 



வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா 
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
தேன் நிலா எனும் நிலா என் தேவியின்
நிலா நீ இல்லாத நாள் எல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா


வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா 
மான் இல்லாத ஊரிலே சாயல் கண்ணிலா
மான் இல்லாத ஊரிலே சாயல் கண்ணிலா 
பூ இல்லாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா


தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா 
தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா
பொன்னிலா பொட்டிலா புன்னகை மொட்டிலா 
அவள் காட்டும் அன்பிலா


இன்பம் கட்டிலா அவள் தேக கட்டிலா
இன்பம் கட்டிலா அவள் தேக கட்டிலா 
தீதிலா காதலா ஊடலா கூடலா 
அவள் மீட்டும் பண் நிலா 
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா


வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா 
வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா
ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா
அவள் நெஞ்சின் ஏட்டிலா


சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா
சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா
எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டது
ஏன் அதை ? சொல்வாய் வெண்ணிலா


வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
நீ இல்லாத நாள் எல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா 

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - பிரபஞ்சத்துக்கு எதிராக போராட்டம் !!

  பிரபஞ்ச சக்திகளை எதிர்த்து நாம் செய்யும் வேலைகள் அனைத்தும் கடைசியில் பூஜ்ஜியமாக முடிகிறது என்ற உணர்வு பலருக்கும் வருகிறது. ஆனால், பிரபஞ்சத...