கேப்டன் மார்வெல் தனது கடந்த காலத்தில் க்ரீ இனத்துக்கு எதிராக செய்த செயல்களின் விளைவுகளை எதிர்கொள்வதிலிருந்து தொடங்குகிறது. அந்தச் செயல்கள் பிரபஞ்சத்தின் சில பகுதிகளை பாதித்துவிட்டன.
புரட்சியாளருடன் தொடர்புடைய ஒரு வினோதமான ஈர்ப்பு விசை போர்டல்‑ஐ ஆராயும் போது,கேரோல்‑ன் சக்திகள் மோனிகா (இப்போது S.A.B.E.R. விண்வெளி வீராங்கனை) மற்றும் கமலா கான் (ஜெர்சி சிட்டியிலிருந்து வந்த உற்சாகமான இளம் ஹீரோ) ஆகியோரின் சக்திகளுடன் இணைந்து விடுகின்றன.
இதனால் அவர்கள் சக்திகளைப் பயன்படுத்தும் போதெல்லாம் டெலிபோர்ட் ஆகி இடம் மாறி விடுகிறார்கள். இந்த விசித்திரமான சூழ்நிலை, மூவரையும் தி மார்வெல்ஸ் எனும் குழுவாக இணைந்து, பிரபஞ்சத்தில் ஏற்பட்ட குழப்பத்தின் மூல காரணத்தை கண்டுபிடிக்கத் தூண்டுகிறது.
அவர்கள் ஒன்றாகச் செயல்படும் போது, தனிப்பட்ட வேறுபாடுகளைத் தாண்டி, சக்திகளை ஒருங்கிணைத்து, பெரிய பிரபஞ்ச அச்சுறுத்தலை நிறுத்த வேண்டும்.
அவர்கள் ஒன்றாகச் செயல்படும் போது, தனிப்பட்ட வேறுபாடுகளைத் தாண்டி, சக்திகளை ஒருங்கிணைத்து, பெரிய பிரபஞ்ச அச்சுறுத்தலை நிறுத்த வேண்டும்.
அதிரடி, நகைச்சுவை, மற்றும் கதாபாத்திர வளர்ச்சியை சமநிலைப்படுத்தி, இறுதியில் மூவரின் ஒற்றுமையை சோதிக்கும் போராட்டத்தில் முடிகிறது. இது MCU‑வின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான மேடையை அமைக்கிறது இருந்தாலும் கதை நன்றாக சொதப்பியதுக்கு இந்த திரைக்கதை நஷ்டமும் முக்கியமான காரணம் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக